பெங்களூர் ஏரிகள் நீரை தூய்மைப்படுத்தி குடிநீராக பயன்படுத்த திட்டம்

பெங்களூர் : மார்ச் 8 -பழமையே புதுமை என்ற தத்துவத்தை தற்போது மாநில அரசுமேற்கொண்டுள்ளது . தற்போது ஏரிகளின் சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஆங்காங்குள்ள எரிகளிலிருந்தே குடிநீரை விநியோகிக்க மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. இதே வேளையில் நகரில் உள்ள சரியான ஏரிகளை அடையாளம் கண்டு அவற்றின் தண்ணீரை சுத்திகரித்து சுற்றுப்புற மக்களுக்கு விநியோகிக்க அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இது குறித்து ஆய்வுவுகள் செய்ய பெங்களூரு குடிநீர் வாரியத்திற்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.உண்மையில் நகரில் முன்னர் 280 ஏரிகள் இருந்த நிலையில் வேறுஎந்த நதி நீர் வருகையும் இல்லாத நிலையில் நகரில் இருந்த பல ஏரிகளும் நகர வளர்ச்சி மற்றும் நவனீகரத்திற்கு அழிந்து போயின.தற்போது வெறும் சிலவே ஏரிகள் நகரில் உள்ளன. இப்போது பெங்களூரு கிரேட்டர் மாநகராட்சி இந்த ஏரிகளின் தண்ணீரை குடிநீருக்கு பயன்டுத்த யோசித்து வருகிறது. இது குறித்து பெங்களூர் குடிநீர் வாரிய தலைவர் பிரசாந்த் மனோகர் கூறுகையில் தேவனஹள்ளியில் உள்ள ஏரியில் இந்திய விஞ்ஞான நிறுவன அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அந்த பகுதி ஏரி தண்ணீர் குடிக்க வசதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வகையில் நகரின் பல பகுதிகளில் உள்ள ஏரி தண்ணீர்களை ஆய்வு செய்வோம். தவிர காவேரி குடிநீர் கிடைக்காத வகையில் உள்ள நகரின் புறப்பகுதிகளில் முக்கிய அக்கறை மேற்கொள்ளப்படும். தவிர வெறும் போர் வேல் தண்ணீரையே நம்பிக்கொண்டிருக்கும் இவர்களுக்கு ஏரிகளில் வடிகட்டி போர் கிணறுகளை அமைக்கும் திட்டமும் உள்ளது. காவேரி குடிநீர் திட்டம் ஐந்தாவது திட்ட பணி நடைமுறைக்கு வரும்வரை இது ஒரு தற்காலிக ஏற்பாடாகும். இதற்க்கு இந்திய விஞ்ஞான பல்கலைக்கழகம் தொழில் நுட்பத்தை வழங்கி வருகிறது. இதைக்காக நயாண்டனஹள்ளி ஏறி மற்றும் சிக்கபானவரா ஆகிய ஏரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஏரிகளின் தண்ணீர் தன்மை குறித்து விரைவில ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த மொத்த பணியும் அடுத்த 15 நாட்களில் முடிய உள்ளது. இதே போல் தேவனஹள்ளியில் உள்ள ஏரியில் ஒரு இயற்க்கை வடிகட்டி கருவி பொருத்தப்பட்டது. இதற்க்கு கார்பன் வடிகட்டுதல் , க்ளோரின்மருந்து மற்றும் யு வி நோய் தடுப்பு முறைகள் பபயன்டுத்தப்பட்டன. இந்த நுண்ணனிய ஆய்வுக தண்ணீரில் சேர்ந்துள்ள 130 மைகாரூனுக்கும் குறைவான கிருமிகளையும் அழித்துவிடும். ஆற்றல் பெற்றவை இதற்கான செலவு 10 லிட்டருக்கு 115 ரூபாயாகும். நகரின் புற பகுதிகளில் உள்ள பெரும்பாலான அபார்ட்மெண்ட் குடியிருப்பு வாசிகள் போர் வெல் மற்றும் டேங்கர் தண்ணீரையே நம்பியுள்ளனர் . ஆனால் தற்போது நிலத்தடி நீர் குறைந்துள்ள நிலையில் காவேரி நீருக்கான தேவை அதிகரித்துள்ளது. தவிர மாநில அரசு பெங்களூர் நகரின் சுற்று பகுதிகளில் கிடைக்கும் நீர் நிலைகள் குறித்தும் ஆய்ந்து வருகிறது. நகரில் குடிநீர் விநியோகிக்க நந்தினி பால் டேங்கர்கள் பயன்படுத்தப்படும். ராணுவம் , ரயில்வே மற்றும் அதிக அளவில் தண்ணீரை பயன்படுதுவோரை கட்டுப்படுத்தும் திட்டமும் உள்ளது. இவர்களுக்கு 10 முதல் 20 சதவிகித குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். இந்த மிச்சபடுத்தப்பட்ட குடிநீர் நகரின் வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். இதுவரை குடிநீர் வாரியம் மற்றும் மாநகராட்சி குடிநீர் பற்றாக்குறை உள்ள 336 இடங்களை கண்டு பிடித்துள்ளது. இத்தகைய பகுதிகளில் 100 ல் 1500 தண்ணீர் டேங்கர்கள் பயன் படுத்தப்படும். இந்த குடிநீர் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இந்த டேங்கர்கள் நாளன்றுக்கு இரன்டு முறை நிரப்பப்பட்டு ட்ராக்டர்களில் விநியோகிக்கப்படும் . தற்போது பெங்களூரு குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான 1200 நிலத்தடி போர்வெல்கல் உலர்ந்து போயுள்ளன. இதில் 400 நிலத்தடி கிணறுகள் பழுது பார்க்காடுள்ளன. இதில் 200 நிலத்தடி குழாய்கள் செயல்பட்டு வருகின்றன. 1400 டேங்கர்கள் குடிநீர் விநியோகததிற்க்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு நகர குடிநீர் வாரிய தலைவர் பிரசாந்த் மனோகர் தெரிவித்தார்.