பெங்களூர் ஓட்டலில் குண்டு வெடிப்பு – 9 பேர் காயம்

பெங்களூர், மார்ச் 1
பெங்களூர் ஒயிட் பீல்டு குந்தாரஹள்ளி என்ற இடத்தில் ராமேஸ்வரம் கபே என்ற பிரபல ஓட்டலில் இன்று மதியம் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 9 பேர் காயம் அடைந்தனர்.

ஆரம்பத்தில் இது ஹோட்டலில் இருந்த சிலிண்டர் வெடித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. பின்னர் இது சக்தி வாய்ந்த ஐஇடி குண்டு என தெரியவந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் பெங்களூரில் பெரும் பீதியை கிளப்பி உள்ளது. குண்டு வெடித்த போது ஓட்டலை சுற்றி இருந்த பகுதிகளில் பயங்கர சத்தம் கேட்டது மக்கள் அலறி அடித்து ஓடினர்.

ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் காத்திருந்தவர்கள் மரண ஓலம் எழுப்பி படி அங்கிருந்து ஓடினர். இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த ஒன்பது பேர் அருகே உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த குண்டுவெடிப்பில் ஓட்டலில் ஒரு பகுதி சேதம் அடைந்து உள்ளது. குண்டு வெடித்த இடம் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த குண்டை வைத்தது யார் காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது இதற்கிடையே எந்த விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இந்த குண்டு வெடிப்பு தொடர்பான தகவல்களை சேகரித்து வருகின்றனர்.