பெங்களூர் ஓட்டலில் ரவுடியை கொன்ற 12 பேர் கும்பல் கைது

பெங்களூர் , மார்ச் 29 – கிழக்கு பெங்களூர் கம்மனஹள்ளியில் ரௌடி ஒருவனை கொலை செய்த விவகாரம் தொடர்பாக சந்தேகத்துக்குரிய 12 பேரை பானசவாடி போலீசார் கைது செய்த்துள்ளனர். கொத்தனூரை சேர்ந்த தினேஷ் குமார்(34) என்பவரை கடந்த புதன் கிழமை அன்று 10 பேர் கொண்ட குமபல் கம் உள்ள ஒரு ஓட்டலில் ஆயுதங்களால் தாக்கினர். ஆனால் ஓட்டலுக்கு தினேஷ் குமாருடன் வந்தவர்களே அவரை தாக்கி கொலை செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது .சந்தேகத்துக்குரியவர்களில் திலீப் சாகர் என்பவனை தவிர மற்றவர்கள் கொலை திட்டம் தீட்ட ஓட்டலில் ஒரு நாளைக்கு அறை எடுத்துள்ளனர். என போலீசார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து போலீசார் கூறுகையில் இவர்களிடம் இறந்த பைகளில் அரிவாள்கள் இருந்துள்ளன. குமாருடன் வந்த இவர்கள் ஒரு நாளைக்கு அறை வாடகைக்கு வேண்டுமாறு ஓட்டல் மேலாளரிடம் கேட்டுள்ளனர் .இதற்க்கு மேலாளர் அறை வாடகை ரொக்கமாக தரவேண்டும் என வற்புறுத்தியுள்ளார். அப்போது தினேஷ் குமார் வரவேற்பறையில் உட்கார்ந்திருக்க இரண்டு பேர் பணம் எடுக்க அருகில் உள்ள ஏ டி எம்முக்கு சென்றுள்ளனர் . சில நிமிடங்களுக்கு பின்னர் அங்கேயே உலாவிக்கொண்டிருந்த ஐந்து பேர் அரிவாள்களால் தினேஷ் குமாரை தாக்கியுள்ளனர். உடனே மேலும் ஐந்து பேர் இவர்களுடன் சேர்ந்து கொண்டு தினேஷ் குமாரை தாக்கியுள்ளனர். முகம் அடையாளம் தெரியாத அளவிற்கு தினேஷ் குமாரை இவர்கள் தாக்கியுள்ளனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.குற்றவாளிகளை கண்டுபிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டதில் இப்போது 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அரவிந்த் , திலீப் சாகர் , அஜய் சிரிஸ்டோபர் , நிகில் என்ற விக்கி, கெளதம் , தர்ஷன் , மெல்வின் , கார்த்திக் , சதீஷ் , கிஷோர் திவாகர் , மற்றும் ஷேகா என தெரியவந்துள்ளது. இதில் சாகர் மற்றும் அஜய் இருவரும் ரௌடி பட்டியலில் இருப்பவர்கள். இவர்களுக்கு எதிராக கொத்தனூர் , ராமமூர்த்தி நகர் மற்றும் பானசவாடி ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த கொலையில் சாகர் தான் முக்கிய குற்றவாளி என சந்தேகிக்கப்படுகிறது .. தினேஷ் குமார் தனக்கு ஆபத்தானவன் என சாகர் கருதியுள்ளான். ஆனாலும் வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பானசவாடி போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு பதிவாகியுள்ளது. இவாறு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.