பெங்களூர் குண்டுவெடிப்பு 2 பேருக்கு ஆயுள் தண்டனை

பெங்களூரு: நவம்பர். 25 – கடந்த 2010ம் ஆண்டு நடந்த ஐ பி எல் கிரிக்கெட் போட்டிகளின் போது நகரின் சின்னசாமி மைதானத்தில் நடந்த வெடி குண்டு விவகாரம் தொடர்பாக தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட இரண்டு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நகரின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கசனப்பா நாயக் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். இதற்கு முன்னர் குற்றவாளிகளுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 4 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது . பின்னர் உயர்நீதிமன்றம் தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு தெரிவித்திருந்தது. அதன்படி மறுபரிசீலனை செய்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறப்பு வழக்கறிஞராக ரவீந்திரா வாதிட்டார்.