பெங்களூர் கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயில்

பெங்களூர், டிச.19-
பெங்களூரில் நான்காவது ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் வரும் டிசம்பர் இறுதிக்குள் கோயம்புத்தூருக்கும் இணைக்கப்பட்ட உள்ளது.
கே .எஸ். ஆர். பெங்களூரை- சேலம் வழியாக, கோயம்புத்தூர் சந்திப்பை இணைக்கும் ரயிலுக்கு, ரயில்வே அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர் எல்லா சாத்தியக் கூறுகளிலும் இது எட்டுப் பெட்டிகள் கொண்ட ரயில் செட்டாக இருக்கும்.
இரண்டு நகரங்களுக்கு இடையே செமி ஹை ஸ்பீட் வேகத்தில் இயக்குவதற்கு வணிக மட்டும் செயல்பாட்டு சாத்திய கூறுகள் அறிக்கையை ரயில்வே வாரியம் கேட்டுள்ளது.
இந்த அறிக்கை சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
மற்றும் ரயில்வே துறையின் இறுதி ஒப்புதலுக்காக அது காத்திருக்கிறது. ரயில்வே துறை வாரிய ஒப்புதலுக்கு பின், கட்டணம், நிறுத்தங்கள், பயண நேரம், பற்றிய விபரங்களை தெளிவாக தெரிவிக்கப்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய அதிவேக ரயில் இரண்டு நகரங்களுக்கு இடையே உள்ள தூரத்தை கடக்க 6 மணி 45 நிமிடங்கள் ஆகிறது. வந்தே பாரதத்தில் 5 மணி நேரத்தில் சென்றடையும்.
பெங்களூர் கோயம்புத்தூரில் இரண்டு ரயில் பாதைகள் உள்ளன. அதில் ஓசூர் மற்றும் சேலம் வழி இது 379 கிலோமீட்டர் தூரமும்,
குப்பம் மற்றும் சேலம் வழி 420 கிலோமீட்டர் தூரமும் உள்ளது.

பெங்களூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எந்த வழியில் செல்லும் என்பது தெளிவாக தெரியவில்லை. குப்பம், சேலம் வழியாக செல்லும் பாதை இரட்டை ரயில் பாதையாக உயர்த்தப்பட்டு மின்மயமாக்கப்பட்ட நிலையில் உள்ளன.

ஓசூர், சேலம் வழியாக செல்லும் பாதை பெரும்பாலும் ஒற்றை ரயில் பாதையாகவே உள்ளது.

பையப்பனஹள்ளி, கார்மேலாரம், ஹீலலிகே,
ஓசூர் ஆகிய பகுதிகளை இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி இன்னும் நடந்து வருகிறது.
இதே போல், ஓசூர் சேலமும் ஒற்றை பாதையாகவே உள்ளது.

கர்நாடக ரயில்வே வேதிக்கே அமைப்பை சேர்ந்த கே .என். கிருஷ்ண பிரசாத் கூறுகையில், பங்காருபேட்டை, குப்பம், வழியாக இயக்கப்பட வேண்டும். கே .ஆர். புரம் பங்காருபேட்டை ரயில் நிலையங்களில் நிறுத்தம் தேவை.

இந்த வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதையும் மின்மயமும் ஆக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி திருப்பத்தூருக்கு பிறகு 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஓசூர், சேலத்தை எடுத்துக் கொண்டால் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 முதல் 100 கிலோமீட்டர் வரை கட்டுப்படுத்தப்படும்.

பெங்களூர் கோயம்புத்தூரில் வந்தே பாரத் ரயில் அது தெற்கு ரயில்வேயின் சேலம் மண்டலத்திற்கு மையமாக கொண்டு இயக்கப்படும்.

இது கோயம்புத்தூரில் இருந்து காலையில் புறப்பட்டு மதியம் பெங்களூர் வந்தடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. முதன்மை பராமரிப்பு கோயம்புத்தூரில் தான் இருக்கும்.