பெங்களூர் சாக்கடை நீரில்ஜே 1 கொரோனா வைரஸ்

பெங்களூர் : டிசம்பர் . 28 – நகரின் அழுக்கு குடிநீரை ஆய்வு செய்துள்ள டாடா நிறுவனம் நகரின் அசுத்த நீரில் கொரோனா கிருமி ஜெ 1 இருப்பதாக தெரிவித்துள்ளது. நகரின் 45 சதவிகித நீரில் இந்த கிருமி இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்திருப்பதாக டாடா நிறுவன ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 11 முதல் 22 வரை 26 சுத்திகரிப்பு மையங்களில் நடத்த பட்ட சோதனைகளின்போது 96 சதவிகித நீரில் இந்த கொரோனா ஜெ என் 1 கிருமி கலந்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் 11 முதல் 15 வரை சேகரிக்கப்பட்ட மாதிரிகளைவிட 18 முதல் 22 வரை சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் அதிகளவுக்கு தொற்று கிருமிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் நகரின் பெரும்பாலான நீரில் கொரோனா விஷ கிருமி பரவியுள்ளதால் நகர மக்கள் பெரும்பாலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. இது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் மிஸ்ரா தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி இது அமைதியான அலையாய் இருப்பதால் மருத்துவமனை பதிவுகள் குறைவாகவே இருக்கும். இந்த நிலையில் நகரின் மூத்த குடிமக்கள் இந்த ஜெ 1 கிருமி குறித்து மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய அவசியம் உள்ளது. இந்த சோதனைகள் நாட்டின் பெங்களூர் , ஹைதராபாத் , டெல்லி மற்றும் புனே ஆகிய நான்கு நகரங்களில் நடத்தப்பட்டுள்ளன.