பெங்களூரு, செப்டம்பர் 7- பெங்களூருவில் ஹெலிகாப்டர் நடுரோட்டில் சிக்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இன்று மாலை பெங்களூரில் உள்ள எச்ஏஎல் நிறுவனம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது
ஒரு தொழிற்சாலை வளாகத்தில் இருந்து அடுத்த தொழிற்சாலைக்கு ஹெலிகாப்டர்கள் கொண்டு செல்லும் போது சாலையை கடப்பது வழக்கம்.
இப்படிச் கொண்டு சென்ற போது ஹெலிகாப்டர் நடுரோட்டில் நின்றுவிட்டது. ஊழியர்கள் அதைச் சுற்றி நிற்கிறார்கள். சாலை குறுகலாக இருந்ததால் வாகன போக்குவரத்து தடைப்பட்டது.
வாகனங்கள் நிற்பதை படத்தில் காணலாம். இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எச்ஏஎல் நிறுவனம் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.நடுரோட்டில் சிக்கிய ஹெலிகாப்டரின் படத்தை அமன் சுரானா சமூக வலைதளமான X இல் பகிர்ந்துள்ளார்.
ஆம்புலன்ஸ், விஐபி வாகனம், அவசர சேவை வாகனம் சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் செய்திகளை பார்த்திருக்கிறோம். ஆனால் இன்று பெங்களூரில் ஒரு ஹெலிகாப்டர் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.