பெங்களூர் சிக்கபானவரா ஏரி சீரமைப்பு

பெங்களூர், மார்ச் 8-
பெங்களூர் வடக்கு தாலுக்கா எஸ்வந்தபூர் ஹோப்ளியில் உள்ள சிக்கபானவாரா கிராமத்தில், பி.டி.ஏ. 12 .60 கோடி ரூபாய் செலவில் ஏரியை மேம்படுத்தி வருகிறது.
டாக்டர் சிவராம் காரந்த் லேஅவுட் வளர்ச்சியுடன் மாசடைந்த சிக்கபானவாரா ஏரியின் புனரமைப்பிலும் ஈடுபட்டுள்ள பிடிஏ இதற்கான டெண்டர் அழைத்திருந்தது.
இதற்கான பணிகள் முடிவடைந்து ஓரிருநாளில் இதன் பணி துவங்கும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புனரமைக்கப்பட்டுள்ள ஒரு பகுதியாக ஏரியின் வண்டல் மண் அகற்றப்படும். ஏரியை ஒட்டி மண்மேடு மற்றும் நடைபாதைகள் அமைக்கப்படும்.
ஏரியில் சேரும் நன்னீரை திருப்பிவிட திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.சமீபத்திய கணக்கெடுப்பின்படி ஏரி பரப்பளவு 105 ஏக்கர். ஆனால் இதில் இரண்டு ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் அதை கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்வோம் .
ஏரிக்கு மாசு கலந்த நீர் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் .ஏரியை வண்டல் மண் அகற்றி நீர் சுத்திகரிக்கப்படும் என சிக்கபானவார் பேரூராட்சி தலைமை அதிகாரி எஸ் .ஏ.குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ம் ஆண்டில் கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என்ற கே.எஸ்.பி.சி.பி. ஏரி சூழலை ஆய்வு செய்து கழிவு நீரை வெளியேற்றுவதற்காக அப்பகுதியில் உள்ள ஒன்பது அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் ஏரியை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது ஏரியை மேம்படுத்த பி டி ஏ முன்வந்துள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஏரியை மேம்படுத்த அப்பகுதி மக்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஏரி நல்ல நிலையில் இருந்த போது சுற்றியுள்ள கிணறுகளில் நன்னீர் இருந்தது. அது பறவைகளின் இல்லமாக இருந்தது. நகரம் வளர வளர ஏரி பாழடைந்து தற்போது ஏரி வளங்கள் சீரழிந்து இருப்பதை சீர்படுத்துவது நல்ல விஷயம் தான்.ஆனால், இந்த மானிய தொகை ஏரியின் முழு வளர்ச்சிக்கு போதுமானதாக இல்லை என, சிக்கபானவராவில் சுற்றுச்சூழல் குழுவை சேர்ந்த திலீப் சிம்ஹா என்பவர் தெரிவித்துள்ளார்.