பெங்களூர் சீரமைப்பு வளர்ச்சி திட்டம் பிடிஏவிடம் ஒப்படைப்பு

பெங்களூர், ஜன 8-
பெங்களூருக்கான மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பொறுப்பை, பெங்களூர் மேம்பாட்டு குழுமம் என்ற பிடிஏ விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் திருத்தப்பட்ட மாஸ்டர் பிளான் 2015ன் மூலம் வழிநடத்தப்படுகிறது. 2019 பிடிஏ திருத்தப்பட்ட மாஸ்டர் பிளானை, 2031வரைக்கு வெளியிட்டது. திருத்தம் செய்ய மேலும் அதற்கான காரணங்களை கூறி 2020ல் அது திரும்ப பெற வேண்டும்.
கர்நாடக அரசு 2023 ஜூனில் பிடிஏ மாஸ்டர் பிளான் வரைபடத்தை 6 மாதங்களுக்குள் தயாரிக்க வேண்டும் என்று கூறியது.
2023 அக்டோபரில் புதிய மாஸ்டர் பிளான் தயாரிக்க அடிப்படை வேலைகளை தொடங்குவதாகவும் கூறியது.
ஆயினும் இன்னும் இத்திட்டம் முழுமை பெறவில்லை.
இந்த மாஸ்டர் பிளான் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை திருத்தப்பட வேண்டும். தனியார் அரசு நிறுவனங்கள் ஆக்கிரமிப்புகளை சரி படுத்தாத அத்துமீறல்களை உட்பட இந்த விஷயத்தில் தாமதமாகவே செயல்படுகிறது.
பல இடங்களில் பள்ளங்கள், போக்குவரத்து நெரிசல்கள், பசுமை மறைப்பு, ஆக்கிரமிப்பு இவைகளில் 2020 முதல் மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பலன் ஏற்படவில்லை. பி எம் டி சி., பி.எம்.ஆர். சி. எல்.குடிநீர் வழங்கல் வடிகால் வாரியம் ஆகியவை நகர வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆயினும் இவைகளுடன் ஒருங்கிணைப்பு பற்றாக்குறை உள்ளது.தனித்துவ கொள்கைகளில் முரண்பாடுகள் உள்ளன.
பெங்களூர் மாநகராட்சி மழை நீர் வடிகால் திட்டம் பிடிஏ வுக்கு, முரணாக உள்ளது. அனைத்து துறைகளுமே ஒருங்கிணைந்து
கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.சுரங்கப்பாதை, சாட்டிலைட் டவுன், மெட்ரோ , விரிவான உயரமான சுற்றுச்சாலை போன்றவைகள் இந்த மேம்பாட்டில் வலியுறுக்கிறது.கனகாபுராவை பெங்களூர் நகரத்தின் ஒரு பகுதியாக மாற்றுவது, மற்றும் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் போன்று சூழலும் கோபுரத்தை உருவாக்குவது போன்றுவை ஏற்படுத்த முடிவுகள் தவிர்க்க முடியாமல் நகரின் எதிர்கால தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்த வேண்டும். இதில் தீர்க்கமான முடிவு எதிர்பார்க்கப்படுகிறது.