பெங்களூர் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் சோதனை

பெங்களூர் : செப்டம்பர் 27 – நகரின் பல தகவல் தொழில் நுட்ப அலுவலகங்களில் இன்று அதிகாலை திடீரென சோதனைகள் நடத்தியுள்ள வருமானவரி துறை அதிகாரிகள் நிறுவனங்களின் ஆவணங்களை பரிசீலித்து வருகின்றனர். நகரில் உள்ள 10க்கும் மேற்பட்ட மென்பொருள் நிறுவனங்களில் இன்று அதிகாலை முதலே ஒரே நேரத்தில் வருமானத்துறை அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டிருப்பதுடன் ஆவணங்களை ஜப்தி செய்து சோதனைகள் மேற்கொண்டுள்ளனர் . நகரின் சர் சி வி ராமன் நகர் , பாகமனே தொழில்நுட்ப பூங்கா , ஹுலிமாவு ஆகிய பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட வருமானத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர் . ஹுலிமாவு அருகில் உள்ள அப்பஸ் அபார்ட்மெண்டில் சோதனைகள் மேற்கொண்டுள்ள வருமானத்துறை அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டிருப்பதுடன் இதே போல் வேறு பல இடங்களிலும் சோதனைகள் நடந்து வருகிறது. இந்த சோதனைகளின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. வருமான வரி செலுத்துதலில் சில நிறுவனங்கள் மோசடி செய்திருப்பது குறித்து தீவிரமாக கருதியுள்ள வருமானவரி துறையினர் நிறுவனங்களின் ஆவணங்கள் , மற்றும் கோப்புகளை தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர். இந்த குழுக்கள் அலுவலகங்களில் உள்ள கோப்புகளை ஆய்ந்து வருகின்றனர். சில தனியார் நிறுவனங்கள் வருமான வரியை செலுத்துவதில் மோசடி செய்யும் நோக்கில் இரண்டு விதமான வருமானத்தை காட்டியிருப்பது வருமானத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இந்த நிலையில் வருமான வரி மோசடிகளை கண்டுபிடிக்க இந்த சோதனைகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக பெரிய நிறுவனங்களும் இத்தகைய மோசடியில் ஈடுபட்டுவந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையில் நகரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் நடத்தி 62.05 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஜப்தி செய்துள்ளனர். இந்திரா நகரில் உள்ள 62.05 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலம் கைப்பற்றப்பட்டுள்ளது . இத்துடன் 2.63 கோடிகள் மதிப்புள்ள முதலீடும் கையகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது . 2002ல் சித்ரா பூர்ணிமா மற்றும் வேறு சிலர் மீது பதிவாகியிருந்த பினாமி சொத்து குறித்து ஆய்வு மேற்கொண்ட அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. குற்றவாளிகள் மோசடி செய்து அரசு நிலத்தை ஆக்ரமித்துள்ளனர் என புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது . இந்த நிலையில் தற்போது அமலாக்கத்துறையினர் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை கையகப்படுத்தியுள்ளனர்.