பெங்களூர் தொழிலதிபர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

பெங்களூர் : நவம்பர். 21 – லோகாயுக்தா சோதனைகளை தொடர்ந்து இன்று அதிகாலை முதலே நகரின் பல்வேறு இடங்களிலும் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
நகரின் மாகடி வீதி , ஆடுகோடி உட்பட பல்வேறு இடங்களில் தொழிலதிபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானத்துறை அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். வரி ஏய்ப்பு விஷயமாக இந்த சோதனைகள் நடந்துவருவதுடன் இவர்கள் இந்த நிறுவனங்களின் ஆவணங்களை பரிசீலனை செய்து வருகின்றனர். இரண்டு இன்னோவா காரில் வந்துள்ள ஆறு அதிகாரிகள் இன்று காலை ஏழு மணியளவில் மாகடி வீதியில் உள்ள தொழிலதிபர் புனித் போரா என்பவருக்கு சொந்தமான இ டி ஏ அபார்ட்மண்டில் உள்ள வீட்டில் சோதனைகள் நடத்தி ஆவணங்களை பரிசீலித்து வருகின்றனர்.
நேற்று தான் நகரில் 11 அதிகாரிகளின் வீடுகளில் லோகாயுக்தா சோதனைகள் நடந்துள்ளது.
தவிர நேற்று முன் தினம் நகரின் உலர் பழங்கள் கடைகளிலும் வருமானவரி துறையினர் சோதனைகள் நடத்துயிருப்பது குறிப்பிடத்தக்கது . நில சுரங்கங்கள் இலாகாவில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து வந்த புகார்களின் அடிப்படையில் இந்த துறையின் பெங்களுர் நகரம் மற்றும் கிராமாந்தரம் ஆகிய 11 அலுவலகங்களில் வருமான ரி துறையினர் சோதனைகள் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று இந்த சோதனைகள் தொடர்ந்துள்ளது . தீபாவளி பண்டிகை முன்னிட்டு டிஜிட்டல் பண பரிமாற்றம் வாயிலாக பெருமளவில் பண பரிமாற்றங்கள் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது . தவிர இவர்களில் பெரும்பாலோனோர் தகுந்த வரியை செலுத்தாததும் தெரிய வரவே இந்த சோதனைகள் நடந்துள்ளது