பெங்களூர் நகர மார்கெட்டுகளின்பரிதாப நிலைகள்

பெங்களூர் : ஏப்ரல் 8 – மாநில தலைநகர் பெங்களூரில் உள்ள அனைத்து மார்கெட் வளாகங்களுக்கு உலகத்தரத்திலான தோற்றத்தை அளிப்போம் – இது மக்கள் பிரதிநிதிகள் அடிக்கடி கூறிடும் ஒரு அப்பட்ட நேர் மறையான அறிவிப்பாகும் . தேர்தல் சமயங்களில் இத்தகைய அறிவிப்புகள் மக்களிடையே நம்பிக்கையை வளர்த்து விடுகின்றன. தேர்தல் பிரசாரங்களின்போது மார்க்கெட்டுகளில் உள்ள வியாபாரிகள் , மற்றும் வர்த்தகர்களின் கையில் துண்டு பிரசுரங்களை திணித்து வாக்கு சேகரிக்கும்போதெல்லாம் அதே மார்க்கெட் வளாகத்தில் நின்று உரையாற்றும்போது அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் இத்தகைய வாக்குறுதிகள் மழையையே பொழிகிறார்கள். தேர்தல்கள் முடிந்து வெற்றி ஏற்றவர்கள் மற்றும் தோற்றவர்கள் அனைவருக்கும் இவை தங்கள் வாக்குறுதிகள் குறித்து மறந்தே போகின்றன. மார்கெட்டுகள் வளர்ச்சியடையும் என்ற வியாபாரிகளின் எதிர்பார்ப்புகள் ஒவ்வொரு முறையும் ஏமாற்றத்தையே அளித்து வருகின்றன. இதே போல்தான் இப்போதும் நகரின் பெரும்பாலும் அனைத்து மார்க்கெட்டுகளிலும் அடிப்படை வசதிகளின் குறைபாடுகள் உள்ளது. சில மார்கெட்டுகளில் வாகனங்கள் நிறுத்த ஐடா வசதிகள் இல்லை . சுத்த குடிநீர் வசதிகள் இல்லை. கழிப்பறை வசதிகள் சீரானதாக இல்லை. தூய்மை என்பது அபூர்வ வார்த்தையாகியுள்ளது , மழை வந்தால் மார்கெட்டுகளின் நிலைமை இன்னும் படு மோசம். சில பகுதிகளில் சரக்குகளை வாகனங்களில் இறக்குவது மற்றும் ஏற்றுவதால் வாகன நெரிசல்கள் ஏற்படுகின்றன. இத்தகைய பல பிரச்சனைகளுடனேயே நகரின் பல மார்கெட்டுகள் கடந்த பலப்பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. **கே ஆர் மார்க்கெட் :: நகரின் முக்கிய மார்க்கெட் இதுவாகும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த மார்க்கெட்டை அபிவிருத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கென 34.67 கோடி ரூபாய்கள் நிதியும் ஒதுக்கப்பட்டது. 2016-17 ம் ஆண்டில் அபிவிருத்தி பணிகளுக்கு துவக்க விழாவும் நடந்தது. ஆனால் இந்த பணிகள் இன்று வரை முடிய வில்லை . இதனால் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இங்கு குடிநீர் வசதி இல்லை. கழிப்பறைகள் இருந்தாலும் தூய்மை இல்ல்லாததால் அப்பக்கம் வருவோர் போவோர் மூக்கை மூடியபடி செல்லவேண்டிவருகிறது. ** ஜெ ,சி மார்க்கெட் : அழுகிய காய்கறி பழங்களின் குவியல் , குடிசைப்பகுதி போன்ற நிலைமையிலேயே தினசரி இங்கு வர்த்தகம் நடந்து வருகிறது. இது கலாசிபாலியாவில் உள்ள ஜெயசாமராஜேந்திரா காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டின் நிலைமை. மார்க்கெட் பகுதி மூன்று ஏக்கர் பரப்பளவு உள்ளது. 490க்கும் அதிக கடைகள் இங்கு உள்ளது. கடைகளை திறக்க 970 பேர் அனுமதி பெற்றிருந்த நிலையில் நகருக்கு காய்கறிகள் மற்றும் பழங்களை விநியோகிக்கும் மொத்த விற்பனை மார்க்கெட் இதுவாகும். அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத இந்த மார்க்கெட்டை இடம் மாற்ற வியாபாரிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அவை செவிடன் காதில் ஊதிய சங்காய் உள்ளது. தினமும் குப்பை குவியலில் நடமாடும் விவசாயிகள் அவஸ்த்தையை பார்த்து குறைந்தது மொத்த வியாபாரத்தையாவது எலெக்ட்ரானிக் சிட்டி அருகில் காளேனஅக்ராஹாரமாவிற்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்ற வியாபாகிறாள் கோரிக்கைக்கு அரசு இன்னமும் ஒப்பவில்லை. எஸ் எம் க்ரிஷ்னா முதல்வராக இருந்த காலத்திலிருந்தே இந்த கோரிக்கை உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொரு தேர்தலின் போதும் மார்க்கெட்டை இடம் மாற்றுவதாக நம்பிக்கை அளித்து வருகிறார்கள். ஆனால் இன்று வரை அது தண்ணீரில் எழுதிய எழுத்தாய் கலைந்து தான் போயுள்ளது. ** மல்லேஸ்வரம் மார்க்கெட் : மல்லேஸ்வரம் சம்பிகே சாலை நடைபாதைகளில் 100கும் அதிகமான வியாபாரிகள் பாழடைந்த கட்டடத்தில் 60 ஆண்டுக்கும் மேலாக பூ வியாபாரம் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு அடுக்கு மாடி கட்டிடம் அமைத்து தருவதாக நம்பிக்கை அளித்து அங்கிருந்து காலிசெய்யப்பட்டனர். அதற்க்கு பக்கத்திலேயே 87 தற்காலிக ஷெட்டுகளை 1.35 கோடிகள் செலவில் அமைத்து அங்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இரண்டு ஆண்டுகளில் கட்டிடம் கட்டி முடிப்பதாக 2015ல் பணிகள் துவக்கப்பட்டு பி டி ஏ இன்று வரை கட்டிட பணியை முடிக்க வில்லை என வியாபாரிகள் குமுறுகிறார்கள் ** ரசல் மார்க்கெட் : ஒரே கூரையின் கீழ் காய்கறிகள் , பழங்கள் , இறைச்சி , மீன் என அனைத்தும் கிடைக்கும் ரசல் மார்க்கெட் நகரின் முக்கிய மற்றும் மிக பண்டைய கால மார்க்கெட்டாகும். ஆனால் இங்கு வாகனங்களை நிறுத்த போதிய வசதிகள் இல்லை. குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி ஒட்டுமொத்தமாய் இல்லை. இதே போல் பெங்களூரு வடக்கு தாலூக்கா தாசனபுரா மார்க்கெட் உபயோகத்துக்கு வராதநிலையில் உள்ளது.