பெங்களூர் பள்ளிகளில் கொரோனா

பெங்களூர்: ஜூன். 14 –
மாநில தலைநகர் பெங்களூரில் கொரோனா நான்காவது அலை தொடங்கியிருக்கும் நிலையில் இரண்டு தனியார் பள்ளிக்கூடங்களில் கொரோனா பரவியிருப்பதில் தடாலடியாக 31 மாணவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நகரின் தாசரஹள்ளி வலயத்தில் ராஜகோபாலநகரில் உள்ள நியூ இன்டர்நேஷனல் பப்லிக் ஸ்கூல் மற்றும் எம் இ எஸ் பப்லிக் ஸ்கூல் ஆகிய இரண்டு தனியார் பள்ளிக்கூடங்களில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நியூ இன்டர்நேஷனல் பப்லிக் ஸ்கூலில் ஐந்து மற்றும் ஆறாவது வகுப்பில் படித்துவரும் 21 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் தெரியவந்திருப்பதுடன் இதுவே எம் இ எஸ் பள்ளிக்கூடத்தில் ஐந்தாவது வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போதைக்கு அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் பள்ளிக்கூட ஊழியர்களுக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. தவிர இரண்டு பள்ளி பகுதிகளும் கொரோனா கட்டுப்பாட்டு வளையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாணவர்களும் தற்போது நலமாக இருப்பதுடன் இது குறித்து எவ்வித ஆதங்கமும் பட தேவையில்லை என பகுதி சுகாதார அதிகாரிகள் நம்பிக்கை அளித்துள்ளனர். இது குறித்து மாநகராட்சி சிறப்பு ஆணையர் ரவீந்திரா கூறுகையில் , இம்மாதம் தடுப்பூசி போட குழு சென்றிருந்தது. அப்போது சிலரிடம் உடல்நலக்குறைவு தென்பட்டதால் அவர்களை சோதித்தபோது கொரோனா உறுதியானது .இரண்டு பள்ளிக்கூடங்களில் 31 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதித்திருப்பது உறுதியாகியுள்ளது. தவிர மீதமுள்ள பத்து மாணவர்களின் சோதனை முடிவு இன்னமும் வரவில்லை. கொரோனா தென்பட்டுள்ள இரண்டு பள்ளிக்கூடங்களும் தற்போதைக்கு மூடப்பட்டுள்ளன. தவிர இந்த பள்ளி கூடங்களின் ஆசிரியர்களுக்கும் கொரோனா சோதனை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்துடன் நகரின் அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் கொரோனா நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 6வது வகுப்பில் 7 பேர் , 7வது வகுப்பில் 3 பேர் , 8வது வகுப்பில் 3 பேர் , 9ஆவது வகுப்பினள் 2 பேர் , 10வது வகுப்பில் ஒருவன் என மொத்தம் 31 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்க பட்டுள்ளனர். பெங்களூரில் சில பள்ளிகளில் கொரோனா தொற்று தென்பட்டுள்ள நிலையில் முன்னரைப்போல் பள்ளிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு பெங்களூரு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் எஸ் ஓ பி யை பின்பற்றுமாறு தெரிவித்துள்ளது. தவிர மாஸ்க் , சானிடைசர் , சமூக இடைவெளி இத்துடன் அனைத்து பள்ளி கல்லூரிகளின் நுழைவு வாயில்களில் மாணவர்களின் உஷ்ணநிலை சோதனை நடத்துமாறும் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது