பெங்களூர் புறநகர் பகுதிகளில் குடிநீர் பஞ்சம் அதிகரிப்பு

பெங்களூர், மார்ச் 20- பெங்களூர் மையப்பகுதிகளை விட புறநகர் பகுதிகளில் குடிநீர் பிரச்சனை கடுமையாக உள்ளது. போர்வெல் நம்பி உள்ள பகுதிகளில் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. வறட்சியால் 50% போர்வெல்கள் வரண்டு விட்டன தற்போது உள்ள போர்வெல்களில் நீர் மட்டம் குறைந்துள்ளது.
சில இடங்களில் நிலத்தடி நீர் உள்ளதால் ,புதிதாக போர்கள் அமைத்தாலும் தண்ணீர் ஏறுவதில்லை. இதனால் அனைத்து இடங்களிலும் பாதிப்பு உள்ளது. கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மக்கள் பிரதிநிதிகளை மக்களின் சாபத்திற்கு ஆளாகி வருகிறார்கள். மாநகரில் தினமும் 500 மில்லியன் லிட்டர் (எம். எல் .டி) தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது என்பதை அரசே ஒப்புக்கொண்டுள்ளது. காவிரிக்கு இணையாக மக்களின் தாகம் தீர்க்கும் போர்வெல்கள், வறண்டு விடுகின்றன. நிலத்தடி நீர் குடிநீருக்காக மக்கள் நடத்திய போராட்டம் சொன்னால் போதாது. தண்ணீர் பிரச்சனையால் விரக்தி அடைந்த மக்கள் தங்கள் தொகுதி எம்எல்ஏக்களை நாடி வருகிறார்கள். மாநகராட்சி மூன்று ஆண்டுகளாகியும் கவுன்சிலர்கள் பதவிகளில் இல்லை. கவுன்சிலர்கள் பதவியில் இருந்திருந்தால் மக்கள் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கிடைத்திருக்கும். வார்டு வாரியாக உறுப்பினர்கள் இல்லாததால் தான் மக்களின் குரலும் ஒலிக்கவில்லை. நகரில் குடிநீர் பிரச்சினை கடுமையாக உள்ளது. மக்களின் கேள்விகளுக்கு பதில் இல்லை. காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை பெரும்பாலான மக்கள் தண்ணீர் கிடைக்காமல் தத்தளிக்கிறார்கள். தேர்தல் என்ற சாக்கில் அதிகாரிகள் தங்கள் பொறுப்பை தட்டி கழிக்கிறார்கள். இதனால் மக்கள் எம்எல்ஏக்களை திட்டி வருகின்றனர். காவிரியில் இருந்து தினமும் 1450 எம்.எல்.டி தண்ணீர் நகருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் 28% தண்ணீர் வெளியே கசிகிறது. போர்வெலில் 600 மில்லியன் தண்ணீர் வழங்கப்படுகிறது. இருப்பினும்,
மக்களின் தாகம் தணிந்த பாடில்லை. மாநகராட்சி பிரிவின் கீழ் உள்ள 110 கிராமங்களில் தண்ணீரின் பிரச்சனை கடுமையாக உள்ளது புறநகர் பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை காவிரியில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக தெரிகிறது. இவ்வளவு நாட்களுக்கு தண்ணீர் பிடிக்க முடியாமல் ஏழை நடுத்தர மக்கள் அவதிப்படுகின்றனர். டேங்கர் நீர் அரசு விலை நிர்ணயம் செய்தும்,
அதன்படி விற்பனை செய்வதில்லை. 3,500 டேங்க்கர்கள் உள்ளத்தில் வெறும் ஆயிரத்து 500 மட்டுமே மாநகராட்சியில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இவைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகின்றனர் இவர்கள் மீது புகார் அளித்தாலும், எந்த நடவடிக்கையும் எடுத்த பாடு இல்லை. 3.50 கோடி ரூபாய் செலவில் புதிய போர்வெல் அமைக்கப்படும். கிராமங்களில் டேங்கர் மூலம் தண்ணீர் சரியான முறையில் சப்ளை செய்யப்படுகிறது என்று கிருஷ்ணராஜபுரம் எம். எல். ஏ .பைரத்தி பசவராஜ் தெரிவித்துள்ளார்.
பல மைதானங்களில் ஐம்பது சின்டெக்ஸ் தொட்டிகள் நிறுவி அதன்மூலம் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டு வருவதாக தாசரஹள்ளி எம்எல்ஏ முனிராஜ் தெரிவித்துள்ளார். மற்ற பகுதிகளை போல எங்கள் தொகுதி மிக மோசம் எதுவும் இல்லை. தனியார் நிறுவனங்கள் போர்வெல்கள் அமைத்து தண்ணீர் பிரச்சனை தீர்க்க முயற்சி செய்து வருவதாக எலகங்கா தொகுதி எம்எல்ஏ விஸ்வநாத் கூறியுள்ளார். போர்வெல்கள் அமைப்பதுடன் ஒன்று இரண்டு தோல்வி அடைகிறது. 50 இடங்களில் சிண்டெக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது 30 போர்வல் தோண்டப்பட்டதில் 20 போர்வெல்களில் தண்ணீர் கிடைக்கிறது என்று, பெங்களூர் தெற்கு பகுதி எம்.எல்.ஏ. எம் கிருஷ்ணப்பா தெரிவித்துள்ளார்.