பெங்களூர் புறநகர் ரயில் திட்டம் தொடரும் தாமதம்

பெங்களூர், மார்ச் 22-
பெங்களூர் கே- ரைட் நிறுவனம் ஏற்றுள்ளபுறநகர் ரயில்வே திட்டம் நம்ம மெட்ரோ ரயில் திட்டம் போல குறிப்பிட்ட காலக்கெடுக்குள் திட்டப் பணிகளை முடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.இதற்கு நில ஒதுக்கீடுஒரு பெரிய காரணம் என்கின்றனர். பெங்களூர்
மாநகராட்சி, பி.டி.ஏ., ஜல மண்டலி, பெஸ்காம், பி.எஸ்.என்.எல். ஆகிய நிறுவனங்களில் ஒருங்கிணைப்பு இல்லாததால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அக்டோபர் மாதம் 2026 ல் கே- ரைட் நிறுவன திட்டப் படி, புறநகர் ரயில் திட்டம் முடிவடைந்து இதன் வர்த்தக சேவை தொடங்கப்பட வேண்டும்.இது நான்கு வழிச் சாலை தடங்களில் திட்டமிடப்பட்டுள்ளது.
பென்னிக்கான ஹள்ளி முதல், சிக்கபானுவரா வரையில்காரிடார் இரண்டில் மட்டுமே பணிகள் நடந்து வருகிறது.
மற்ற மூன்று வழி தடங்களில் பணிகள் தொடங்கவே இல்லை.
காரிடார் இரண்டில் தேவையான 120. 44 ஏக்கர் நிலத்தில் 119 .18 ஏக்கர் அதாவது, 98 5% நிலத்தை மட்டுமே அரசு கையகப்படுத்தி உள்ளது. இதில் 20 சதவீதம் வேலை மட்டுமே பணிகள் நடந்துள்ளன. காரிடார் நான்கில் ஹிலலிகே முதல் ராஜானுகுண்டே வரையில், டெண்டர் விடப்பட்டதில் எல் அண்ட் டி டெண்டர் ஏற்றுள்ளது. ஆயினும் இதன் பணியை அவர்கள் தொடங்கவே இல்லை. காரிடார் – 1ல் பெங்களூர் சிட்டி முதல் தேவனஹள்ளி வரையில் பணிகள் நடக்க வேண்டும். காரிடார் மூன்றில் கெங்கேரி முதல் ஒய்ட் ஃபீல்ட் வரை பணிகள் நடக்க வேண்டும். இன்னும் இதற்கு டெண்டர் விடவே இல்லை.
இது மாநில, மத்திய அரசு கூட்டு திட்டமாகும். ரயில்வே துறை நிலம் ஒதுக்குவதில் தவறான கொள்கையே இந்த தாமதத்திற்கு காரணமாக தெரிகிறது என்று கூறப் படுகிறது. கே – ரைடு திட்டம் உருவாக்க வெளிநாட்டு வங்கிகளிடம் கடனுதவி எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் திட்டத்தில் நிறைவேற்றவே முடியாது.எனவே ஜெர்மன் லக்சம் பர்க் நகரில் உள்ள கே. எஃப். டபிள்யூ. டெவலப்மென்ட் வங்கி கே -ரைட் நிறுவனத்துக்கு 4,561 கோடி ரூபாய் வழங்க கடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது 20 ஆண்டுகளுக்கு 4 சதவீத வட்டி திட்டத்தில் பெறப்படுகிறது.கே எஃப் டபிள்யூ வழங்கும் இந்த உதவி திட்டத்தில் கெங்கேறி ஒயிட் பீல்ட் இடையே உள்ள காரிடார் மூன்று மற்றும் காரிடார் நான்கு பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்த தூரம் 48 17 கிலோமீட்டர் மொத்த ரயில் நிலையம் 58 மொத்த நடைபாதை 4 என தெரிவிக்கப்பட்டுள்ளது