பெங்களூர் புறநகர் ரயில் திட்டம் வேகப்படுத்த முத்தரப்பு ஒப்பந்தம்

பெங்களூர், நவ. 16-
பெங்களூர் புறநகர் ரயில் திட்டத்தை சீரமைக்க கர்நாடக மாநில அரசு, ரயில்வே அமைச்சகம், மற்றும் கே- ரைட், என முத்தரப்பு ஒப்பந்தம் புதன் கிழமை கையெழுத்தானது.
இந்த திட்ட அமலாக்க முகாமை, ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாடு நிறுவனம் என்ற கே-ரைட் திட்டத்தில் ஒருங்கிணைந்த பொறுப்புகள், வழிமுறைகளுக்கு ஒப்பந்தத்தில் கையத்திடப்பட்டன .இந்த பெரிய திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க இந்த ஒப்பந்தம் முக்கியம் என கே- ரைட் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தை திறம்பட முடிக்க கர்நாடக அரசு, ரயில்வே அமைச்சகம்ஃ மற்றும் கே-ரைட் ஆகிய பங்களிப்பை வழிநடத்தும்; மற்றும் நிர்வகிக்கும்; ஒத்துழைப்பு மற்றும் முறைகளின் பரந்த கொள்கைகளை நிறுவுவது இதன் நோக்கம் ஆகும்.
இதன் படி இரு தரப்பு நிதி நிறுவனங்களுடன் கடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட கட்டாய தேவைகளில் இந்த ஒப்பந்தம் ஒன்றாகும். ஜெர்மன் வளர்ச்சி வங்கி கே. எஃப் .டபிள்யூ., மற்றும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி பி.எஸ் .ஆர். பி. 800 மில்லியன் யூரோக்கள் இந்திய ரூபாய் மதிப்பீடு படி 7,438 கோடி ரூபாய் கடன் பெற செயல் முறையை முடிக்கும் .இது உதவும்.தாழ்வாரங்கள் ஒன்று மற்றும் மூன்று டிப்போக்கள் மற்றும் சிஸ்டம்களில் சிவில் பணிகளுக்கான டெண்டர்களை விரைவில் அழைத்து இறுதிச் செய்ய எதிர்பார்க்கின்றனர்.
148 .17 கிலோ மீட்டர் பரப்பளவு பி.எஸ்.ஆர்.பி.
தேசிய புறநகர் ரயில் கொள்கையில் 2018 தான் முதல் புறநகர் திட்டமாகும்.
இதனை நான்கு கன்னட பூக்கள் பெயரில் திட்டமிடப்பட்டுள்ளது. *சம்பிகே:
கே. எஸ். ஆர். பெங்களூர் – தேவனஹள்ளி 41.4 கி.மீ., மற்றும் 5 கிலோ மீட்டர் விமான நிலையம் வரை இணைக்கப்படும்.
*மல்லிகை: பெனிக்கான ஹள்ளி -சிக்கபானுவரா 25.01 கிலோ மீட்டர்.*பாரிஜாதா :கெங்கேரி – ஒயிட் ஃபீல்டு 35 கிலோமீட்டர் .கனகா :ஹீலலிகே – ரஆஜஆனஉகஉண்டஏ

  1. 88 கிலோ மீட்டர்.
    மல்லிகே லைனில் மட்டுமே அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் முதல் தூண்கள் ஹெப்பாலில் உருவாகிறது.
    கனகா லைனுக்கு சிவில் ஒப்பந்தத்துக்கான மிகக் குறைந்த ஏலம் எல்.அண்டுடி. எடுத்துள்ளது. இதனை கே -.ரைடு விடம் ஒப்பந்தம் வழங்கப் படுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
    பி.எஸ்.ஆர்.பி., 40 மாத கால கெடுவின் படி ஜூன் 2022 ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அது 2028 ல் நிறைவடைய தள்ளி போயுள்ளது.