பெங்களூர் மக்களை வாட்டி வதைக்கும் கோடை வெயில்

பெங்களூர் : ஏப்ரல். 22 – கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை பெய்த மழையால் நகரம் இரண்டு மாதங்கள் தொடர்ந்து சுட்டெரித்த வெயிலிலிருந்து சற்றே குளுமை அடைந்திருந்தும் மீண்டும் இந்த வாரம் முழுக்க வறண்ட நிலையே தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரின் அடுத்த வார சீதோஷ்ணநிலை குறித்து முன்னறிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் நகரில் வறண்ட நிலை தொடரும் என்றும் வெய்யிலின் தாக்கமும் இரண்டு அல்லது மூன்று செல்ஸியஸ் டிகிரீகள் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 6 அன்று எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நகரில் உஷ்ண நிலை ,மிக அதிக அளவில் 37.6 டிகிரி செல்ஸியஸை தொட்டிருப்பினும் கடந்த மூன்று நாட்களில் மூன்று டிகிரீக்கள் குறைந்தது நகரின் சுற்றுப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை லேசான மழை பெய்திருப்பினும் அது ஒரு மி மீ அளவிற்கு கூட பதிவாகவில்லை. என்பதே உண்மை நிலை. இந்த நிலையில் ஏற்கெனவே நகரை வாட்டியெடுக்கும் குடிநீர் தட்டுப்பாடு வரும் நாடகளில் மேலும் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது. எனவே தலைக்கு மேல் சூரியனும் உடலுக்குள் தணியாத தாகமும் இன்னும் சில நாட்கள் நகர மக்களை கண்டிப்பாக வாட்டிவதைக்கும்.என்பது உண்மை