பெங்களூர் மாநகராட்சிக்கு நிலுவைத் தொகை கிடைக்கவில்லை

பெங்களூர், ஜன.24-
பெங்களூரில் மூன்று ஆண்டுகளாகியும் கட்டணம் செலுத்தி பார்க்கிங் செய்யும் நிறுவனத்திடம் இருந்து பெங்களூர் மாநகராட்சிக்கு, இன்னும் நிலுவைத் தொகையை
பெங்களூர் முக்கிய பகுதியில் உள்ள 11 சாலைகளில் மாநகராட்சி அறிமுகம் படுத்திய கட்டண பார்க்கிங் அமைப்பு, பகல் கொள்ளை அமைப்பாக மாறி உள்ளது.
இருசக்கர வாகனம் மற்றும் கார் பயணிகளிடம் மணி கணக்கில் பார்க்கிங் கட்டணத்தை தனியார் நிறுவனம் உன்னிப்பாக வசூலித்து வரும் நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக மாநகராட்சிக்கு ஒரு ரூபாய் கூட செலுத்தவில்லை என ஆவணங்கள் காட்டுகின்றன.
இன்றுவரை மாநகராட்சி இதுகுறித்து போலீசில் புகார் செய்யவில்லை.
பார்க்கிங் கட்டணத்தை வசூலிப்பதை ஏஜென்சிகள் தடுக்கவும் இல்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்கள், 2019 ஆகஸ்டில் ஒப்பந்தத்தை வழங்கிய நகரத்தை அடிப்படையாகக் கொண்ட நிறுவனம், ஏப்ரல் 2021 முதல் மாநகராட்சிக்கு பணம் செலுத்தவில்லை. நிறுத்தியுள்ளது.
அசல் ஒப்பந்தப்படி 84 சாலைகளில் பார்க்கிங் கட்டணத்தை வசூலித்து ஆண்டுக்கு 31. 60 கோடி ரூபாயை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டியிருக்கிறது.
ஒப்பந்தத்தை ஏற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோவிட் 19 தொற்று
நோயை காரணம் காட்டி நிறுவனம் சலுகையை கோரியது.அக்டோபர் 2020 முதல் மே 2021 வரை 9 சாலையை நிர்வகிக்க கட்டணத்தை மாநகராட்சி பின்னர் 28 லட்சமாக குறைத்தது.மாநகராட்சி எப்போதாவது 28 லட்சத்தை பெற்றதா என்பது குறித்து உறுதியாக பதில் தெரிவிக்கவில்லை.
மாநகராட்சிக்கு இந்த நிறுவனம் பணத்தை செலுத்தவில்லை.கனிகாம் சாலை, எம்.ஜி சாலை, மல்லையா மருத்துவமனை சாலை, ரெசிடென்சி சாலை, செயின்ட் மார்க்ஸ் சாலை சர்ச் ஸ்ட்ரீட், பிற முக்கிய சாலைகளில் பார்க்கிங் கட்டணத்தை வசூலித்து வருகிறது.
முன்கூட்டியே வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணத்துடன் வழக்கமான வாகனங்கள் நிறுத்தும் இடங்களை போல் அல்லாமல் கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் நேரத்தை செலுத்த அனுமதிக்காமல், 500 ரூபாய் அபராதம் விதிப்பது குறித்து பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். 2 .6 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும்.ஏஜென்சியில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் இதனை பொருட்படுத்தப்படவில்லை.இது தொடர்பாக நவம்பர் 2023 மாநகராட்சி ஓர் அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் உங்கள் முடிவில் எந்த முடிவும் வரவில்லை. 7 நாட்களுக்குள் பணம் செலுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.ஏற்கனவே 25 லட்ச ரூபாய் வழங்கியுள்ளோம் என்று மாநகராட்சி செயல் பொறியாளர் பாலாஜி அனுப்பிய நோட்டீஸ்க்கு ஏஜென்சி அளித்த பதிலில் தெரிவித்திருந்தனர். மற்றும் கணக்குத் துறை இடம் சரி பார்க்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.மாநகராட்சி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற பதிலை பெற்ற மரிய லிங்க கவுடா மாலி பாட்டில் இது தொடர்பாக கிரிமினல் குற்றச்சாட்டு ஏன் பதிவு செய்யவில்லை. அல்லது நிறுவனத்தை தடுப்பு பட்டியலில் ஏன் வைக்கவில்லை என்று மாநகராட்சி மீது வருத்தம் தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் சொத்து வரி செலுத்தவில்லை என்றால் சொத்தை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என்று மிரட்டுகின்றனர். ஆனால் நிறுவனம் கட்டணம் வசூலித்து பகல் கொள்ளையடித்து வருவதை தடுக்க எந்த நடவடிக்கையும் மாநகராட்சி எடுக்கப்படவில்லை.20க்கும் மேற்பட்ட சாலைகள் கட்டணம் செலுத்தி பார்க்கிங் அமைப்பை நடத்தி வருவதால் ஏஜென்சிகள் 50 கோடி குறையாமல் பாக்கி வைத்துள்ளது.