பெங்களூர் மாநகராட்சி தேர்தல்

மைசூர் : ஜூலை. 20 – பெங்களூரு ப்ரஹுத் மாநகராட்சி மற்றும் மாவட்ட , தாலூகா மற்றும் தாலூகா பஞ்சாயத்துகளுக்கு உச்சநீதி மன்றத்தின் உத்தரவுப்படி தேர்தல்கள் நடக்க உள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கபினி மற்றும் கே ஆர் எஸ் அணைக்கட்டுகளுக்கு வருடாந்திர பூஜை செய்யும் முன்னர் நகரின் சாமுண்டி மலையில் மாநில தேவதை சாமுண்டேஸ்வரிக்கு நடந்த பூஜைகளில் பங்கு கொண்டு சிறப்பு வழிபாடு நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் பேசுகையில் பி பி எம் பி , மாவட்டங்கள் மற்றும் தாலூகா பஞ்சாயத்து தேர்தல்கள் குறித்து மாநில அரசு வார்டுகள் பிரிப்பு மற்றும் ஒதுக்கீடுகள் தொடர்பாக இம்மாதம் 22 அன்று உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கும் என்றார்.
மாநில அரசு உச்ச நீதிமன்றத்திற்கு அளிக்க உள்ள அறிக்கைக்கு நீதிமன்றம் எவ்விதத்தில் முடிவு எடுக்கிறதோ அதற்கேற்ப தேர்தல்கள் நடக்கும். தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தின் உத்தரவுகளை பின்பற்றுவோம். என்றார்.
இதே வேளையில் முதல்வர் பசவராஜ் பொம்மை ரிமோட் கண்ட்ரோல் முதல்வர் என மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி கி சிவகுமார் கூறியிருப்பதற்கு பதிலளித்த முதல்வர் பசவராஜ் பொம்மை பாவம் , டி கே சிவகுமார் தன் பல ஆண்டுகள் கனவான முதல்வர் பதவிக்காக அலைமோதுகிறார். மாநில கட்சி தலைவராகவே கூட அவரை சரியாக பணியாற்ற விடவில்லை. நாங்கள் தினமும் அனைத்தையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.என பதிலடி கொடுத்தார். காங்கிரசில் முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் கட்சியின் மாநில தலைவர் டி கே சிவகுமார் இருவரும் நானொரு கரையில் நீ ஒரு கரையில் என்பது போல் நடந்து கொள்கிறார்கள். முதலில் அவர்கள் தட்டில் என்ன இருக்கிறது என்பதை பார்த்து கொள்ளட்டும். மத்திய அரசு மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய ஜி எஸ் டி யை சரியாகவே கொடுத்து வருகிறது.
இதில் எவ்வித கஷ்டமும் இல்லை. ஜி எஸ் டி நிவாரணத்தை இரண்டு வருடங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற மாநிலங்களின் கோரிக்கையை ஜி எஸ் டி சட்ட நியமனங்களின்படி ஏற்று கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி எஸ் தி சட்ட நியமங்களை பாராளுமன்றத்தில் அனைத்து கட்சிகளும் சேர்ந்தே ஒப்புதல் அளித்துள்ளன. இந்த சட்டத்தின் படி ஜிஎஸ் டி நிவாரணம் வெறும் ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே என முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு அனைத்து ஜி எஸ் டி நிலுவைகளையும் அளித்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் சுமார் 8,800 கோடி ரூபாய் மாநிலத்திற்கு வழங்கியுள்ளார்கள் இவ்வாறு முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.