பெங்களுர் : அக்டோபர் . 30 – நகரின் பிரசித்திபெற்ற மால் ஒன்றில் நேற்று மாலை காமுகன் ஒருவன் இளம்பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது .இந்த வீடியோவில் காமுகன் வேண்டுமென்றே இளம்பெண்களின் பின்பகுதியை உராயும் வகையில் ஆபாசமாக நடந்துகொண்டுள்ளான் . ஆனால் இந்த சம்பவம் எங்கு நடந்துள்ளது என்பது இன்னமும் தெரியவரவில்லை. ஆனாலும் சமீபத்தில் நகரில் திறக்கப்பட்டு மிகவும் பிரசித்தி அடைந்து வரும் லூலூ மாலில் நடந்துள்ளதாக கருதப்படுகிறது . இன்ஸ்டராகிராம் கணக்கின் வாயிலாக இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி நேற்று மாலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜன கும்பல் இருக்கும் பகுதிகளில் இந்த காமுகன் பெண்கள் மற்றும் இளம்பெண்கள் உள்ள பகுதிகளில் திரிந்து வந்துள்ளான். இதை கவனித்த ஒருவர் இவனை பின்தொடர்ந்துள்ளார். பின்னர் அவர் இந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் மால் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். பின்னர் பாதுகாப்பு ஊழியர்கள் அவனை தேடி உள்ளனர். ஆனால் அவன் அங்கிருந்து தப்பிவிட்டதாக ஊழியர்கள் பதிவு செய்துள்ளனர் . இது குறித்த வீடியோ வைரல் ஆகியிருப்பது குறித்து மாகடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால் காமுகனின் தவறான நடவடிக்கைகள் குறித்து இது வரை யாரும் எழுத்து ரீதியில் புகார் அளிக்கவில்லை. இதனால் போலீசார் வெறும் வீடியோ பதிவை வைத்து விசாரணையை நடத்திவருகின்றனர். வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது உறுதியானபின்னர் வழக்கு பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். வயது முதிர்ந்த காமுகன் வேண்டுமென்றெ இளம் பெண்களின்பின்பகுதிகளில் உரசியுள்ளான். தவிர அவன் இளம் பெண்களின் பின்பகுதியை தொட்டிருப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது