பெங்களூரு, அக். 7- நம்ம மெட்ரோ ரயிலுக்குள், எஸ்கலேட்டரில் இருந்தபோது குறும்புத்தனமாக விளையாடிய இளைஞர் ஒருவர், தனது செயல்களை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிஎம்ஆர்சிஎல்) அதிகாரி ஒருவர் கூறுகையில், பிரஜ்வல் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சத்தைப் பயன்படுத்தி வீடியோக்களை வெளியிட்டார். சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ காட்சி ஒன்றில், இளைஞர் ஒருவர் மெட்ரோ ரயில் நிலைய எஸ்கலேட்டரைப் பயன்படுத்தும் போது, வலிப்பு வந்து கீழே விழுவது போல் நடித்துள்ளார். இதனால் பீதியடைந்து பெண் ஒருவர் இளைஞருக்கு உதவி, ஆறுதல் கூறுவதைக் காணமுடிகிறது. மற்றொரு வீடியோவில், மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் போது இளைஞர் அதே சேட்டையை செய்வதை காணமுடிகிறது. இது தொடர்பாக பிஎம்ஆர்சிஎல்லின் உதவி பாதுகாப்பு அதிகாரி, கோவிந்தராஜ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், மெட்ரோவைப் பயன்படுத்தும்போது ஒருவர் பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் நெறிமுறைகள். நகரும் எஸ்கலேட்டரில் அவர் குறும்பு விளையாடியபோது ஒரு வயதான பெண் பீதியடைந்தார்.
மெட்ரோ ரயில் பெட்டிக்குள் இருந்த பயணிகள் அவரது செயலைக் கண்டு பீதியடைந்தனர். அண்மையில் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் பற்றி அறிந்தோம்.
வீடியோக்களை ஆன்லைனில் வெளியிட்ட நபரை அடையாளம் காண எங்கள் ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர் என்று தெரிவித்திருந்தார்.
மற்றொரு வீடியோவில் பயன்படுத்தப்பட்ட பைக்கின் நம்பர் பிளேட்டுகள் அவரை அடையாளம் காண உதவியது. அவரின் பெயர் பிரஜ்வல், அவர் நாகர்பாவியில் வசிப்பவர் என்பது தெரியவந்தது.
இதற்கிடையில், பிரிஜ்வலுக்கு பிஎம்ஆர்சிஎல் ரூ.500 ரூபாய் அபராதம் விதித்தது. கடந்த வியாழக்கிழமை மெட்ரோ அதிகாரிகள் பிரஜ்வலை கோவிந்தராஜ் நகர் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். அங்கு எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களை மீண்டும் செய்ய மாட்டேன் என்று பிரஜ்வல் உறுதிமொழி அளித்தார். மெட்ரோ ரயில், நிலையத்தில் நடைபெறும் 3 வது விதிமீறல் சம்பவம் இதுவாகும்.