பெங்களூர் மெட்ரோ ரயில்களில் தினசரி6 லட்சம் பேர் பயணம்

பெங்களூர், ஆக 8-
மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவாறு உள்ளது 54 ரயில்களில் தினமும் 6.1 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள்.
கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் முந்தய மாதத்தை விட அதிகரித்து வருவதாக இதன் எண்ணிக்கை பதிவு செய்கிறது.
கடந்த நான்கு மாதங்களில் மெட்ரோ ரயில் சேவை, தினசரி பயணிகள் எண்ணிக்கை அடிப்படையில் ஜூலையின் கணக்குப்படி

  1. 11 லட்சத்தை எட்டியது.
    கடந்த மாதம் 17 நாட்களுக்கு 6.2 லட்சம் பயணிகளுக்கும் அதிகமானோர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர் . ஜனவரி மாதத்தை விட ஜூலை மாதத்தில் சராசரி 16 சதவீதம் அதிகமான பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்கள்.பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் என்ற பி. எம். ஆர். சி. எல்.,
    திறமையான மற்றும் நம்பகமான பொது போக்குவரத்து அமைப்பாக பிரபலம் அடைந்ததை குறிக்கிறது.ஆயினும், அதன் செயல் திறன் குறைந்து இருப்பதாக ஒரு விமர்சகர் தெரிவித்துள்ளார். 2.1 கிலோ மீட்டர் கே. ஆர். புரம் பையப்பனஹள்ளி மற்றும்1.9 கிலோமீட்டர் கெங்கேரி- செலகட்டா வழித்தடங்களில் ஆகஸ்ட் இறுதிக்குள் திறக்கப்பட்டவுடன் தினசரி பயணிகள் எண்ணிக்கை 75 லட்சத்தை எட்டும் என்றுபி .எம் .ஆர். சி. எல்., மூத்த அதிகாரி தெரிவிக்கிறார்.
    பி. எம். ஆர். சி .எல்.2 பகுதிகளில் சோதனை ஓட்டங்களை நடத்தி வருகிறது. எம்.ஜி., சாலை பையப்பன ஹள்ளி தினசரி 35 ஆயிரம் பேர் பயணிக்கின்றனர்.70 கிலோமீட்டர் நீள நெட்வொர்க் ஒருநாளுக்கு ஆறு லட்சத்திற்கு அதிகமாக பயணிகள் கடந்த 12 ஆண்டுகளில் நம்ம மெட்ரோ நீண்ட தூர சேவைக்கு வந்துள்ளது. பெண்களுக்கான இலவச பஸ் பயணத்திட்டத்தை அரசு அறிவித்து அமுல்படுத்திய போதிலும், மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாதிப்பு ஏற்படவில்லை.மார்ச் மாதம் இயக்க தொடங்கிய கே .ஆர் .புரம் – ஒயிட்ஃபீல்டு மட்டுமே ஆதாயம் கிடைக்கவில்லை
    பி. எம். ஆர் .சி .எல். அதன் செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்தால் நம்ம மெட்ரோ ஒரு நாளைக்கு 10.5 லட்சம் பேருக்கு சேவை செய்ய முடியும் என்று நிபுணர் பிரசாந்த் சீனிவாஸ் தெரிவித்துள்ளார்.
    தற்போதைய மெட்ரோ பாதை ஒழுங்கற்றதாக உள்ளது .அதனை சீரமைக்க வேண்டும். பீக் ஹவர், மற்றும் பீக் ஹவர் சாலை இல்லாத நேரம் ஆகியவற்றில் பெரிய இடைவெளி உள்ளது.
    மெட்ரோ ரயில் இயக்க நேரம் நீடிக்க வேண்டும். அனைத்து நிலையங்களிலும் அனைத்து நுழைவு வெளியேறும் பாயிண்ட்களையும் திறக்கப்பட வேண்டும் என்று விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.