பெங்களூர் மைசூர் அதி விரைவு சாலையில் விபத்து – 2 பேர் சாவு

பெங்களூர் : அக்டோபர் : 14 – பெங்களூரு-மைசூர் பத்து வழித்தட அதிவிரைவு நெடுஞசாலையில் கொடூர சாலை விபத்து ஏற்பட்டு இரண்டு பேர் அதே இடத்தில் இறந்திருப்பதுடன் ஐந்து பேர் படுகாயங்களடைந்துள்ள சம்பவம் ராம்நகர் தாலூக்காவின் கெம்பெகௌடானதொட்டி அருகில் நடந்துள்ளது . பீன்யாவை சேர்ந்த ராஜேஷ் (42) , உமா (35) , ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் . இந்த விபத்தில் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமமையில் சேர்க்கப்பட்டிருப்பதுடன் அவர்களில் பெண் ஒருவரின் நிலை கவலைக்கிடமாயுள்ளதாக தெரியவந்துள்ளது . பெங்களூரிலிருந்து மைசூருக்கு சென்றுகொண்டிருந்த லாரி மீது பின்னிருந்து வேகமாக வந்த ஓம்னி வாகனம் மோதியுள்ளது . லாரியை ஓவர் டேக் செய்ய முயற்சித்தநிலையில் பின்னாலிருந்துந்து லாரிமீது ஓம்னி வாகனம் மோதியுள்ளது . இந்த மோதலின் விளைவாக ஓம்னி வாகனம் முழுதும் அப்பளம் போல் நொறுங்கியுள்ளது . இந்த வாகனத்தில் ஏழு பேர் பயணிகள் இருந்தனர் . இதில் அதே இடத்தில் இரண்டுபேர் உயிரிழந்திருப்பதுடன் குழந்தைகள் உட்பட நான்கு பேருக்கு சிறு காயங்களாகியுள்ளன . ராஜேஷ் என்பவரின் குடுமபம் மைசூருக்கு சென்றுகொண்டிருந்த நிலையில் இந்த விபத்து காரணமாக இந்த பகுதியில் சிலமணி நேரங்கள் வாகன போக்குவரத்திற்கு இடைஞ்சல்கள் ஏற்பட்டுள்ளது . விபத்து நடந்த இடத்திற்கு ராம்நகர் போலீசார் விரைந்து சென்று பரிசீலனை செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.