பெங்களூர் ரயில் நிலையங்களில் மேலும் 2 உணவகங்கள் திறப்பு

பெங்களூர், மார்ச் 12-
பெங்களூரில் இரண்டு ரயில் உணவகங்கள் இம்மாதம் இறுதிக்குள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் கே.எஸ்.ஆர். பெங்களூர் சிட்டி, மற்றும் சர் எம்.விஸ்வேஸ்வரையாடெர்மினல் ஆகிய ரயில் நிலையங்கள் ஆகியவற்றின் நுழைவாயிலில் உள்ள தண்டவாளங்களின் இடங்களில் ரயில் உணவகம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தது.ஆனால், காலம்கெடு அதிகரித்து விட்டது.
டிசம்பர் 2023ல் ஒத்திவைக்கப்பட்டு ஐந்து மாதத்திற்கு பின் ரயில் உணவகங்கள் இம்மாத இறுதிக்குள் தொடங்கப்பட உள்ளன.பழைய ரயில் பெட்டிகளை அழகான உணவகங்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்த உணவகத்தில் உள்ளே 40 பேரும், வெளியே 40 பேரும், அமரலாம். 24 மணி நேரமும் இந்த உணவகங்கள் திறந்திருக்கும். இந்த உணவகங்கள் முழுமையாக குளிரூட்டப்பட்டவை ஏ.சி.வசதி செய்யப்பட்டு இருக்கும்.
மைசூர், அசோகாபுரம் டிப்போவில் இருந்து பெட்டிகள் கொண்டுவரப்பட்டு, ரயில்வே ஒப்பந்ததாரர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. ரயில் உணவகத்திற்காக ரயில் பாதையும் தயார் செய்யப்பட்டுள்ளன. இதனால் ரயில்வே துறைக்கு சிறந்த வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது.பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்தில் தினமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கிறார்கள்.
இதனால் அங்கு நல்ல வருமானம் எதிர்பார்க்கப் படுகிறது. ரயில்வே உணவக குத்தகைதாரர்களிடம் இருந்து உரிம கட்டணமாக ஆண்டுக்கு 87 லட்சத்தை ரயில்வே துறை வசூலிக்கும். அதே போல சர். எம் விஸ்வேஷ்வரய்யா டெர்மினல் ரயில் நிலையத்தில் நாள்தோறும் 60,000 கும் மேற்பட்ட மக்கள் பயணிக்கின்றனர்.
மேலும் உணவக உரிமை கட்டணமாக ஆண்டுக்கு 33 லட்ச ரூபாய் பெற ரயில்வே திட்டமிடப் பட்டுள்ளது.
கே எஸ் ஆர் பெங்களூர் ரயில் உணவகத்தில் ஜூன் 2023 ஓ.ஏ.எம். இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும்,சர்.எம். விஸ்வேஷ்வரய்யா
ரயில் நிலையத்துக்கு கௌரவ் என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கும், உணவகத்தை குத்தகைக்கு எடுத்துள்ளனர்.
ஐந்தாண்டு குத்தகை உரிம கட்டணம் மூலம் ரயில்வேவுக்கு மொத்தம் 7 கோடி 54 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னிந்திய, வட இந்திய, பாணியில் சைவ உணவு தயாரிக்கப்படும். தேவைக்கேற்ப ‘மெனு’ அடிப்படையில் இதனை மேலும் விரிவுபடுத்த படலாம். ஏற்கனவே ஹூப்ளி, சென்னை ஹைதராபாத், விஜயவாடா, போபால், மும்பை, நதிகதிபுதிரா, லதிகான், கோடில்கோ திட்டாதி ஆகிய இடங்களில் ரயில் உணவகங்கள் நடத்தப் பட்டு வருகின்றன.