
பெங்களூர் : ஜூன். 20 – இரட்டை இன்ஜின் அரசு நிரந்தரமாக பணியாற்றும். பெங்களூரின் போக்குவரத்து சங்கடங்களுக்கு முடிவு கட்டும் நோக்கில் மற்றும் பெங்களூரை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இரட்டை இன்ஜின் அரசு என்றுமே பொறுப்பாகவுள்ளது. உங்களின் சேவைகளுக்கு நாங்கள் எப்போதுமே தயாராயிருக்கிறோம் என பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். நகரின் கொம்மகட்டாவில் 33 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோதி பெங்களூர் , மற்றும் இங்குள்ள இளைய சக்தி மற்றும் தொழில் வளர்ச்சிகள் குறித்து பாராட்டுகள் தெரிவித்தார். பெங்களூர் கனவுகளின் நகரம். அபிவிருத்தியே பெங்களூரின் இளைஞர்களின் கனவாக உள்ளது. அரசின் உதவி கிடைத்தால் பெங்களூரின் இளைஞர்கள் எதை வேண்டுமானாலும் சாதிப்பார்கள். இங்கு அத்தகைய தொழில் நுட்ப திறமை உள்ளது. பெங்களூர் நகரம் அத்ய நிர்பத் பாரத் சக்திக்கு உதவியாக உள்ளது. பெங்களூர் நகருக்கு 40 ஆண்டுகளுக்கு முன்னரே துணை நகர ரயில் உட்பட பயண நேரத்தை குறைக்கும் மற்றும் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதை குறைக்கும் வேறு திட்டங்கள் கிடைத்திருந்தால் நிலைமையே வேறாக இருந்திருக்கும். என்னை நம்புங்கள். நீங்கள் எனக்கு பொறுப்பை கொடுத்துள்ளீர்கள். ஒவ்வொரு கணமும் உங்களுக்கு உழைப்பதற்கு ஒதுக்கியுள்ளேன். நான் காலத்தை வீணடிக்க மாட்டேன் என பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.