பெங்களூர் வெறிச்சோடியது

பெங்களூர் செப்டம்பர் 26
தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்து விடப்பட்டு இருப்பதை கண்டித்து பெங்களூரில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது காவேரி நதிநீர் பாதுகாப்பு அமைப்பு மற்றும் கர்நாடக விவசாய அமைப்புகள் கன்னட அமைப்புகள் இணைந்து இந்த பந்த் போராட்டத்தை நடத்தினர். இதனால் பெங்களூர் முடங்கியது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது பஸ்கள் ஆட்டோக்கள் ஓடவில்லை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. பெங்களூர் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. நகரத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன பெங்களூரில் நான்கு திசைகளில் இருந்தும் அணி அணியாக திரண்ட அமைப்பினர் ஊர்வலம் தர்ணா ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களை எழுப்பினர் தமிழகத்திற்கு எதிராக முழக்கமிட்டனர். பெங்களூர் சுதந்திரப் பூங்காவை தவிர மற்ற இடங்களில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர் இந்த போராட்டத்திற்கு பிஜேபி ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டது. பெங்களூர் நகரம் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது அனைத்து இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டனர் குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பெங்களூர் சுதந்திர பூங்காவில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது ஒரு விவசாயி மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. எந்த காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீர் விடக்கூடாது நமக்கே இங்கு தண்ணீர் போதாது இருக்கும்போது நாம் ஏன் தண்ணீர் விட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர். பெங்களூர் மாநகரில் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற அனைத்தும் முடங்கியது.

காவிரி நீர் தொடர்பாக கர்நாடகம்-தமிழ்நாடு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 18-ந் தேதி உத்தரவிட்து.தங்களிடம் போதிய நீர் இல்லாததால் இந்த உத்தரவை அமல்படுத்த கர்நாடகம் மறுத்துவிட்டது. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து மண்டியா உள்ளிட்ட காவிரி படுகை பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளன. கடந்த 23-ந் தேதி மண்டியாவில் முழு அடைப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக நீர் பாதுகாப்பு குழு, பெங்களூருவில் 26-ந் தேதி (அதாவது இன்று) முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தது. அதன்படி பெங்களூருவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்பு நடந்தது. இந்த முழு அடைப்பு போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. இந்த முழு அடைப்புக்கு தமிழ் சங்கம் உள்பட 150-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்பட சில கன்னட சங்கங்கள், முழு அடைப்புக்கு ஆதரவு இல்லை என்று அறிவித்துள்ளன. ஓலோ, ஊபர் டாக்சி சங்கங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என்றும், வழக்கம்போல் இயங்கும் என்றும் அறிவித்தன. இது தவிர உணவக உரிமையாளர்கள் சங்கம் உள்பட சில சங்கங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளன. முழு அடைப்பையொட்டி நீர் பாதுகாப்பு குழு சார்பில் பெங்களூருவில் இன்று ஊர்வலம் நடந்தது டவுன்ஹாலில் ஊர்வலம் தொடங்கி சுதந்திர பூங்கா வரை நடந்தது. இதுகுறித்து அந்த குழுவின் ஒருங்கிணைப்பாளரும், கர்நாடக கரும்பு விவசாயிகள் சங்க தலைவருமான குருபூர் சாந்தக்குமார் கூறும்போது தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்து விட்டு இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம் உடனடியாக தண்ணீரை நிறுத்த வேண்டும் என்று கூறினார். முழு அடைப்பையொட்டி பஸ், ஆட்டோ, வாடகை கார்கள், டாக்சிகள் ஓடவில்லை. திரையரங்குகள், வணிக வளாகங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டது அரசு-தனியார் பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டது. இந்த முழுஅடைப்பு காரணமாக பள்ளிகளில் இன்று நடைபெற இருந்து காலாண்டு தேர்வு வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. வணிக நிறுவனங்கள், கடைகள், தனியார் நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவையும் மூடப்பட்டது. ஆஸ்பத்திரிகள், மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 60 பிளட்டூன் கர்நாடக ஆயுதப்படை, 40 பிளட்டூன் நகர ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுதவிர வெளி மாாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் பாதுகாப்புக்கு பெங்களூருவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் . கர்நாடக ஐகோர்ட்டும் சுதந்திர பூங்கா தவிர வேறு எங்கும் போராட்டம், ஊர்வலம் நடத்த கூடாது என உத்தரவிட்டு இருந்தது இந்த பந்த் போராட்டம் காரணமாக நேற்று நள்ளிரவு 12 மணியில் இருந்து நாளை அதாவது இன்று நள்ளிரவு வரை பெங்களூரில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. வழக்கம்போல் மெட்ரோ ரெயில்கள் இயங்கியது.