பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்வு


புதுடெல்லி, பிப். 23- சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல்-டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில் கொரோனாவுக்கு பிறகு தேவை அதிகரித்துள்ளதை தொடர்ந்து சுமார் ஓராண்டுக்குப் பிறகு முதல் முறையாக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 61 டாலரை எட்டியுள்ளது.
இது இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையில் எதிரொலித்து வருகிறது. அது மட்டுமின்றி இந்தியாவில் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசலுக்கு முறையே 61 சதவீதம் மற்றும் 56 சதவீதம் வரியை மத்திய-மாநில அரசுகள் விதிக்கின்றன. இதனால் கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை சற்று அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து ரூ.90.83-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் டீசல் சிலை லிட்டருக்கு 35 காசுகள் அதிகரித்து ரூ.81.32-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.