பெட்ரோல் டீசல் விலை திரும்ப பெற கோரி பிஜேபி போராட்டம்

பெங்களூரு, ஜூன் 17:
கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிஜேபி இதற்கு காரணமான கர்நாடக அரசு பெட்ரோல் டீசல் மீதான விற்பனை வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தியது.கர்நாடக அரசு செயல்படுத்தி வரும் ஐந்து உத்தரவாத திட்டங்களால் மாநிலத்தின் நிதி நிலைமை மிக மோசமாகி வருவதாக கூறப்படுகிறது.இதனால் வேறு வழி இல்லாமல் கூடுதல் நிதியை அரசு கஜானாவில் சேர்க்கும் வண்ணம் மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரியை கர்நாடக அரசு திடீரென உயர்த்தியது இதன் மூலம் மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா மூன்று ரூபாய் வரை உயர்ந்துள்ளது.ஏற்கனவே பல்வேறு பொருட்களின் விலை உயர்வால் அவதிப்பட்டு வரும் பொது மக்களுக்கு இந்த திடீர் விலை உயர்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இன்று மாநிலம் தழுவிய அளவில் பிஜேபி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது பெங்களூர் உட்பட கர்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த போராட்டம் நடந்தது பெங்களூரில் பிஜேபி தலைவர்கள் மாட்டுவண்டி ஊர்வலம் நடத்தினர் கர்நாடக அரசுக்கு எதிராக ஆவேசமாக கோஷங்கள் எழுப்பினர்.கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு நிர்வாக செயல் திறன் இழந்துவிட்டது பெட்ரோல் மற்றும் டீசல் மிதான விற்பனை வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று மாநில பிஜேபி தலைவர்கள் கூறினர்கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது