பெட்ரோல் மின் கட்டண உயர்வு – சித்தராமையா ஆவேசம்

பெங்களூர், ஜூன் 10- பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு மின் கட்டண உயர்வு ஆகியவற்றால் சாதாரண ஏழை எளிய மக்களை மத்திய மாநில அரசுகள் வஞ்சித்து வருவதாக கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா குற்றம் சாட்டினார். இது தொடர்பாக இன்று அவர் தனது இல்லத்தில் நிருபர்களிடம் கூறியதாவது இந்த குர்ஆன் காலகட்டத்தில் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வரும் சூழ்நிலையில் மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு தேவையான பொருட்கள் மீது விலை உயர்த்தி வருகிறது கர்நாடக அரசு கடந்த ஒரு வருடத்தில் 30 முறை மின் கட்டணம் உயர்த்தி உள்ளது பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு உள்ளிட்டவைகளை விலை உயர்வை கண்டித்து நாளை முதல் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெறும். கர்நாடக முதல்வர் மாற்றமில்லை என்று பிஜேபி மேலிட பொறுப்பாளர் கூறியுள்ளார் .நெருப்பு இல்லாமல் புகையாது. முதல்வரை மாற்ற வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை என்று சித்தராமையா கூறினார்.