
திருப்பதி: ஆக.3 -தெலுங்கானா மாநிலத்தில் சுகாதாரம் குறித்த மாநாடு நடந்தது. இதில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:- இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் பெண்களின் சுகாதாரத் தேவைகள் முற்றிலும் தீர்க்கப்படாத ஒன்றாக உள்ளது. பொது சுகாதார வல்லுநர்கள் நீண்ட காலமாக பெண்களைப் பாதிக்கும் நோய்களைப் பற்றி போதுமான அளவுக்கு கணிக்கவில்லை. இது இலக்கு வைக்கப்பட்ட சுகாதாரக் கொள்கைகளை உருவாக்கும் முயற்சிகளைத் தடுக்கிறது. அரசு வழங்கும் சுகாதார சேவைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியது அவசியம்.
குறிப்பாக கிராமப்புறங்களில், சுகாதார சேவையை மேம்படுத்த நடமாடும் மருத்துவ பிரிவுகளை நிறுவ வேண்டும்.