பெண்கள் அதிகாரம் பறைசாற்றல்

புதுடெல்லி ஜனவரி 26
டெல்லியில் இன்று நடந்த குடியரசு தின விழாவில் பெண்களுக்கு அதிகாரம் என்பதை மையப்படுத்தி கண் கவர் அணி வகுப்பு நடந்தது
இந்த குடியரசு தினத்தில் “பெண்கள் அதிகாரம்” என்பதை சிறப்பிக்கும் வகையில், சமூக-பொருளாதார நடவடிக்கைகளில் பெண்களின் பங்கு முதல் பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு வரை 26 அலங்கார வாகனங்கள் அணிவகுத்து சென்றன.
அணிவகுப்பு பெண்களை மையமாக வைத்து ‘விக்சித் பாரத்’ மற்றும் ‘பாரத் – லோக்தந்த்ரா கி மாத்ருகா’ ஆகியவை முக்கிய கருப்பொருளாக இருந்தது
சமூக-பொருளாதார நடவடிக்கைகளில் பெண்களின் முக்கியப் பாத்திரங்களை எடுத்துக்காட்டி, இவை நடத்தப்பட்டன
75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். 21 பீரங்கி குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவரால் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது. தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் கர்தவ்ய பாதையில் முப்படைகள் உள்ளிட்ட பல்வேறு படைப் பிரிவினரின் அணிவகுப்பை தொடங்கிவைத்த குடியரசுத் தலைவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
சாரட் வண்டியில் வந்த குடியரசுத் தலைவர், பிரான்ஸ் அதிபர்: நாட்டின் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் சிறப்பு அணிவகுப்பில் தலைமை விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரை இன்று குடியரசு தின விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தன்னுடன் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து வந்தார். சாரட் வண்டியின் முன்னும் பின்பும் குதிரையில் வீரர்கள் அணிவகுத்து வந்தனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவையும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானையும் பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைத் தளபதிகள் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் குடியரசுத் தலைவர் 21 குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்கப்பட தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
அதன் பின்னர் கண்கவர் அணிவகுப்பு தொடங்கியது. குதிரைப் படை, பீரங்கிப் படை அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றார். அதன் பின்னர் மற்ற அணிவகுப்புகள் தொடங்கின. அந்த வரிசையில் பிரான்ஸ் நாட்டு ராணுவ வீரர்களின் அணிவகுப்பு அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.