ஆமதாபாத், ஆக. 4-“பெண்கள் செழிக்கும்போது உலகம் செழிக்கிறது. பெண்களின் பொருளாதார அதிகாரம் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் கல்விக்கான அணுகல் உலகளாவிய முன்னேற்றத்தை உந்துகிறது. பெண்களின் குரல்கள் நேர்மறையான மாற்றத்தை உந்துகின்றன” என்று இந்தியாவின் ஜி 20 தலைமையின் கீழ் பெண்கள் அதிகாரமளித்தல் தொடர்பான அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். .இந்தியாவின் ஜி20 பிரசிடென்சியின் கீழ், குஜராத்தின் தலைநகர் காந்திநகரில் பெண்கள் அதிகாரமளித்தல் தொடர்பான அமைச்சர்கள் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மூன்று நாள் கூட்டத்திற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமை தாங்கினார். ஜி20 உறுப்பினர்கள் மற்றும் அழைக்கப்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இதனுடன், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர். மகேந்திர முஞ்பரா மற்றும் இந்தியாவின் ஜி20 தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா ஆகியோர் தொடக்க அமர்வில் பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு காணொளி காட்சி செய்தியுடன் 3 நாள் அமைச்சர்கள் மாநாடு தொடங்கியது. பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், “பெண்கள் செழிக்கும்போது, உலகம் செழிக்கும். பெண்களின் பொருளாதார அதிகாரம் மேம்பாட்டையும், கல்விக்கான அணுகல் உலக முன்னேற்றத்தையும் தூண்டுகிறது. பெண்களின் குரல்கள் நேர்மறையான மாற்றத்தை ஊக்குவிக்கிறது. பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான மிகச் சிறந்த வழி பெண்களே- மையப்படுத்தப்பட்ட வளர்ச்சி அணுகுமுறை மற்றும் இந்தியா இந்த திசையில் முன்னேறுகிறது. பெண் தொழில்முனைவோர் உலகளாவிய தலைவர்கள்.” அவர்கள் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளர்கள்,” என்று அவர் கூறினார்.