பெண்ணைகொன்று தீவைத்து எரிப்பு

ராய்ச்சூர் : அக்டோபர் . 26 – பெண்மணி ஒருவரை கொடூரமாக கொலை செய்து பின்னர் உடலை தீயிட்டு கொளுத்தியுள்ள சம்பவம் நேற்று நள்ளிரவு லிங்கசகூறு தாலூக்காவின் ஹட்டி நகரில் நடந்துள்ளது . தகவல் அறிந்து இன்று அதிகாலை போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து வந்த போதிலும் உடல் தீயில் வேகுவது கண்டுவந்துள்ளது. பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹட்டி பட்டணத்தை சேர்ந்த மஞ்சுளா (45) என்பவர் கொலையுண்டவர். இவரை குற்றவாளிகளும்கொலை செய்து பின்னர் உடலை எரித்துள்ளனர். வீட்டிலிருந்து பெண்ணை வெளியே அழைத்துவந்து கொலை செய்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. அதிகாலை 2 அல்லது 3 மணியளவில் இந்த குற்றம் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மஞ்சுளா ஹட்டி தங்க சுரங்கத்தில் அரசு மருத்துவமனையில் வேலை செய்து வந்துள்ளார்.சில வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய கணவனை இழந்த இவர் ஹட்டி பட்டினத்தில் தன்னுடைய குழந்தைகளுடன் ஜி ஆர் காலனியில் ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். சம்பவ இடத்திற்கு ஹட்டி நகர போலீசார் நேரில் வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.