பெண்ணை ஏமாற்றிதங்க நகைகளை அபகரித்தடிரைவர் கைது

பெங்களூர் : ஆகஸ்ட் . 2 – பயணித்துக்கொண்டிருந்த போது தன் தனிப்பட்ட விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்த பெண்ணை குறி வைத்து சினிமா பாணியில் 22 லட்ச ரூபாய் ரிக் மற்றும் 750 கிராம் தங்க நகைகளை வழிப்பறி செய்த கேப் ஓட்டுநர் ராமமூர்த்தி நகர் போலீசாரிடம் சிக்கியுள்ளான். ஹெசர்கட்டாவை சேர்ந்த உபர் கேப் ஓட்டுநர் கிரண் குமார் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி . இவனிடமிருந்து பெண்களிடம் இவன் அபகரித்துவந்த ரொக்கம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டிருப்பதுடன் இவனிடம் கூடுதல் விசாரணை நடந்து வருகிறது. கடந்த 2022ல் நவம்பர் மாதம் ஒரு பெண்மணி இந்திராநகரிலிருந்து பானசவாடி வரை புக் செய்து கொண்ட கேபில் பயணித்தபோது குற்றவாளி கிரண் குமார் அவளை தனக்கு அறிமுகப்படுத்தி கொண்டுள்ளான். அதே நேரத்தில் அந்த பெண்ணும் தன்னுடைய பள்ளி நண்பர்கள் குறித்து அவனிடம் விவரித்துள்ளாள். சில நாட்களுக்கு பின்னர் ஓட்டுநர் அந்த பெண்ணிடம் தான் தன்னுடைய பள்ளி நண்பன் என போனில் பேசியுள்ளார். தன்னுடைய பழைய நண்பன் என்ற முறையில் அவனுடன் தொடர்பை வளர்த்த பெண்மணி யிடம் தான் பெரும் பொருளாதார நஷ்டத்தில் இருப்பதாகவும் தனக்கு உதவி செயுமாறும் கேட்டுள்ளான். தன்னுடைய பால்ய நண்பன் என்ற முறையில் பெண்ணும் அவனுக்கு பணம் அனுப்பியுள்ளாள் . இந்த நிலையில் பெண் அனுப்பிய 22 லட்ச ரூபாய்களை பெற்று கொண்ட குற்றவாளி கிரண் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததுடன் அவனுடைய உண்மை நிலையை அறிந்த பெண்மணிக்கு அவளிடம் இத்தனை நாட்களாக போனில் பேசி வந்தவன்பால்ய நண்பன் இல்லை என தெரியவந்துள்ளது. இந்த விஷயம் கேப் ஓட்டுனருக்கு தெரியவந்த பின்னர் அவனும் பெண்ணை மிரட்ட துவங்கியுள்ளன. உன்னுடைய மற்றும் உன் பால்ய நண்பன் உடனான உறவு குறித்து உன் கணவனிடம் தெரிவித்து உங்கள் குடும்பத்தை சீரழிப்பேன் , என மிரட்டி அவளுடைய 750 கிராம் தங்க நகைகளை அபகரித்துள்ளான் இது குறித்து ராமமூர்த்தி நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது. பின்னர் இது குறித்து நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் குற்றவாளி கிரண் குமாரை கைது செய்து அவன் பெண்ணிடமிருந்து அபகரித்த தங்க நகைகள் மற்றும் ரொக்கத்தை கைப்பற்றியுள்ளனர்.