பெண்ணை குத்தி கொன்ற வாலிபர் தற்கொலை

மடிகேரி,ஜன.18-
ஜனவரி. 18 – விராஜ்பேட்டை தாலூகாவின் இரண்டாவது ருத்ரகுப்பே கிராமத்தை சேர்ந்த ஆரத்தி என்ற இளம் பெண்ணை கத்தியால் அறுத்து கொலை செய்த குற்றவாளி திம்மய்யா என்பவன் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளான் . ருத்ரகுப்பே கிராமத்தில் தன் வீட்டு அருகில் உள்ள ஏரியில் திம்மய்யாவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 15 அன்று ஆரத்தியை கத்தியால் அறுத்து கொலைசெய்து விட்டு பின்னர் ஏரியில் குதித்து திம்மய்யா தற்கொலை செய்து கொண்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் திம்மய்யாவை போலீசார் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இரண்டு நாட்களாக தொடர்ந்து ஏரியில் திம்மய்யாவை தேடியும் அவனுடைய உடல் கிடைத்திருக்கவில்லை. நேற்று மதியம் ஏரியின் நீரை பம்ப் வாயிலாக வெளியற்றிய நிலையில் நேற்று நள்ளிரவு திம்மய்யாவின் இறந்த உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏரியில் அதிகளவில் சேறு சேர்ந்திருந்ததால் திம்மய்யாவின் இறந்த உடல் எளிதில் கிடைக்கவில்லை . இறந்துபோன திம்மய்யாவின் உடலை விராஜ்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆரத்தி கொலையுண்ட இடத்திற்கு அருகிலேயே திம்மய்யாவின் பைக் , மொபைல் , மற்றும் செருப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆரத்தியை கொலை செய்து விட்டு திம்மய்யாவும் விஷம் அருந்தி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இதற்கு சாட்சியாக திம்மய்யாவின் பைக் அருகில் ஒரு விஷ பாட்டிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது