பெண்ணை கொன்றஆண் புலி சிறை பிடிப்பு

மைசூர் : நவம்பர் . 28 – பண்டீபுரா வன பகுதியில் ஒரு பெண்ணை கொன்று கிராம மக்களின் தூக்கத்தை கெடுத்துவந்த புலியை இன்று அதிகாலை வனத்துறையினர் சிறைபிடித்துள்ளனர் . நஞ்சன்கூடு தாலூகாவின் ஹெடியாளா கிராமத்தின் அருகில் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு புலிக்கு மயக்க மருந்து செலுத்தி புலியை சிறைபிடித்து பின்னர் அதை மைசூர் மிருகங்கள் சரணாலயத்தில் விட்டுள்ளனர் . ஹெடியாளா கிராமத்தின் அருகில் அதிகாலை 1.45 மணியளவில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பசு ஒன்றை கொன்றிருந்த இடத்திற்கு புலி மீண்டும் வந்த போது மயக்க ஊசி செலுத்தி சிறைபிடிக்கப்பட்டுள்ளது . இது 10 வந்துள்ள ஆண் புலியாகும். கடந்த நவம்பர் 24 அன்று ஹெடியாளா வனப்பகுதியில் பல்லூரு ஹண்டி அருகில் கால்நடைகளை மேய்க்க சென்றிருந்த ரத்னம்மா (55) என்பவரை தாக்கியதோடு புலி அவரை கொன்றுவிட்டது . தவிர அவருடைய உடலின் பகுதிகளை தின்றும் உள்ளது. அடுத்த நாள் அதே கிராமத்தில் பசு ஒன்றை தாக்கிய புலி அதையும் கொன்றுள்ளது . இதனால் ஆத்திரமடைந்த கிராமத்து மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இப்போது மூன்று நாட்களுக்கு பின்னர் கொடூர புலி சிறைபிடிக்கப்பட்டுள்ளது . ஒரு முறை வேட்டையாடிய இடத்திற்கு மீண்டும் புலி வருவது நிச்சயம் என்ற கருத்தில் புலி பசுவை தாக்கிய இடத்தில் காமிராக்கள் பொருத்தப்பட்டன. இரவு 8 மணிக்கே புலி பசுவை தின்ன வந்திருப்பது காமிராவில் பதிவாகியுள்ளது. இதனால் எச்சரிக்கை அடைந்த வனத்துறையினர் அதே இடத்தில் கூண்டை வைத்து அதற்குள் கால்நடை மருத்துவரையும் தங்க செய்தனர். நள்ளிரவில் புலி மீண்டும் வந்த போது அதற்க்கு மயக்க ஊசி செலுத்தி சிறைபிடிக்கப்பட்டது . சிலவே நிமிடங்களில் சுருண்டு விழுந்த புலியை வலையில் பிடித்து அதிகாலை மைசூர் சரணாலயத்தில் விடப்பட்டுள்ளது. இதற்கிடையில் புலியை பிடிக்க பழக்கப்பட்ட யானை மற்றும் டிரோன் காமிராக்களும் பயன்படுத்தப்பட்டன. பார்த்தா , லோஹித் மற்றும் ஹிரண்யா ஆகிய பழக்கப்பட்ட யானைகளின் உதவியுடன் புளியை தேடும் பான் நடந்தது. அப்போது இரண்டு புலிகள் நடமாடுவது காமிராவில் பதிவாகியிருந்தது. தவிர வளர்ப்பு பிராணிகளை அவை தாக்கியிருப்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் அதிகாரிகள் உட்பட 207 ஊழியர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.