பெண் ஊழியர்களைவிசாரிக்க வந்த நபர் கைது

பெங்களூர் : ஜனவரி 17 – முதல்வரின் அந்தரங்க உதவியாளர் என கூறிக்கொண்டு அரசு பெண் ஊழியர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வந்த ஒருவனை விதான சௌதா போலீசார் கைது செய்துள்ளனர். விக்ரம் கோபாலசாமி என்பவன் கைது செய்யப்பட்ட குற்றவாளியாவான். தான் முதல்வர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆகியோரின் அந்தரங்க செல்லிலாளர் என கூறி கொண்டு திரிந்து வந்த குற்றவாளி டி ஜெ அலுவலகம் மற்றும் ஆணையர் அலுவலகத்திலிருந்து போன் செய்வதாக கூறி கொண்டு வருவாய்த்துறை பெண் ஊழியர்களின் விவரங்களை கேட்டு வந்துள்ளான். இவனுடைய நடவடிக்கையை கவனித்த உயர் அதிகாரி ஒருவர் விதான சௌதா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து கொண்ட போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு விக்ரம் கோபாலஸ்வ்மியை கைது செய்து நடத்திய விசாரணையில் இவன் ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் மகன் என தெரியவந்துள்ளது.விதான சௌதா மற்றும் எம் எஸ் கட்டிடங்களில் திரிந்துகொண்டிருந்த குற்றவாளி அரசு அதிகாரிகளின் விவரங்களை தெரிந்துகொண்டு அவர்களை மிரட்டி வந்திருப்பதுடன் இவனை கைது செய்துள்ள விதான சௌதா போலீசார் இவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.