பெண் கொலை:பெண் உள்பட 2 பேர் கைது

பெங்களூரு, மே 8: பெண்ணை கற்பழித்து, கொலை செய்த நபரும், அவரது காதலியையும் சிக்கபள்ளாபூர் போலீசார் கைது செய்தனர்.
சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபிதனூர் தாலுகா கொனகனஹள்ளியை சேர்ந்த அலுமேலம்மா (40) கொலை செய்யப்பட்ட சஞ்சீவப்பா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ராமாஞ்சினம்மா ஆகியோரை போலீசார் கைது செய்னர்.அலுமேலம்மா அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சஞ்சீவப்பாவும், அவரது காதலரான ரமாஞ்சினம்மாவும் இந்தக் கொலையைச் செய்துள்ளனர்.சஞ்சீவப்பாவுக்கும், ராமாஞ்சினம்மாவுக்கும் இடையே தொடர்பு இருந்தது. இவர்களது உறவுக்கு அலுமேலம்மாதான் தடையாக இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் சேர்ந்து இந்த கொலையை செய்துள்ளனர். நான்கு நாட்களாக அலுமேலம்மாவை கிராமத்தில் காணவில்லை. ராமன்ஜியின் நடத்தையில் சந்தேகமடைந்த கிராம மக்கள் அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.அலுமேலம்மாவின் சடலம் ஊருக்கு வெளியே காட்டில் கண்டெடுக்கப்பட்டது. கவுரிபிதானூர் ஊரக போலீசார் வழக்கு பதிந்து, குற்றவாளிகள் கைது செய்த‌னர்.