பெண் சக்தி நிரூபித்த பிரியங்கா

பெங்களூர்,ஜன.16-
பெங்களூர் அரண்மனை மைதானத்தில் இன்று பிரியங்கா காந்தி கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் லட்சக்கணக்கான பேர் கலந்து கொண்டனர் குறிப்பாக பெண்கள் கூட்டம் அலைமோதியது. முன்னதாக விமான நிலையத்தில் பிரியங்கா காந்திக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது விமான நிலையத்தில் இருந்து அரண்மனை மைதானம் வரை வழி நடக்க காங்கிரஸ் தொண்டர்கள் பெண்கள் குவிந்து இருந்து பிரியங்கா காந்தியை வரவேற்றனர். மதியம் அரண்மனை மைதானத்தில் உள்ள மேடைக்கு வந்த பிரியங்கா காந்திக்கு வாழ்த்து கோஷங்கள் மூலம் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர் தொண்டர்களின் வரவேற்பு மழையில் நனைந்த பிரியங்கா காந்தி மைக்கை பிடித்து ஊராட்சிகரமாக பேசினார் மத்திய பிஜேபி ஆட்சியிலும் கர்நாடக மாநில பிஜேபி ஆட்சியிலும் மத்திய மாநில அரசுகள் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியில் பின்தங்கி உள்ளது பிஜேபி என்ற கட்சியிடம் இருந்து நமது நாட்டை மீட்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம் கர்நாடக மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்பட வேண்டும் கர்நாடகா மாநிலம் என்பது காங்கிரஸ் கட்சியின் கோட்டை ஆகும் அதை மீட்டெடுக்க வேண்டும் கர்நாடக மாநில பிஜேபி ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களை துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் கர்நாடகத்தில் பிஜேபி ஆட்சி விரட்டியடிக்கப்பட வேண்டும் மீண்டும் இங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க க்கப்படும் போது பெண்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படும். பெண்கள் இந்த நாட்டின் சக்திகளாக திகழ்கின்றனர் அவர்களை சமூக பொருளாதாரத்தில் முன்னேற்ற வேண்டிய அனைத்து நல திட்டங்களையும் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்படும் என்று பேசிய பிரியங்கா காந்தி தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளையும் கூறினார்.