பெண் பலி

சந்திராப்பூர், டிச.31
சந்திராப்பூர் மாவட்டம் ஹிர்வா தேக்ரி கிராமத்தை சேர்ந்த பெண் நர்மதா(வயது45). நேற்று முன்தினம் வயல் வெளிக்கு சென்ற அவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் தேடிசென்றனர். அப்போது, அங்கு புலி தாக்கப்பட்ட நிலையில் அவர் இறந்துகிடந்தார். தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மனித வேட்டையாடிய புலியின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.