பெண் பிள்ளைகள் படிக்கத் தடை

காபூல், ஆக. 7- ஆப்கானிஸ்தானின் சில பிராந்தியங்களில் பெண் குழந்தைகள் 3ம் வகுப்பிற்கு மேல் படிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளை பள்ளியை விட்டு அனுப்புமாறு பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.பெண்களுக்கு எதிராக தலிபான் அரசால் விதிக்கப்பட்டு வரும் கட்டுப்பாடுகளுக்கு உலக நாடுகளும், பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது பெண் பிள்ளைகள் 3ம் வகுப்பிற்கு மேல் படிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.