பெண் போலீஸ் ஊழியரிடம் தவறான நடத்தை : உயர் போலிஸ் அதிகாரி தமிழ் நாட்டில் கைது

பெங்களூர் : பிப்ரவரி. 2 – பெண் போலீஸ் ஊழியரிடம் ஆபாசமாக பேசிய மாநிலத்தின் உள்பிரிவு பாதுகாப்பு எஸ் பியான கர்நாடகாவை சேர்ந்த ஐ பி எஸ் அதிகாரி தமிழ் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். உள்துறை பாதுகாப்பு பிரிவு எஸ் பியாக தார்வாடில் பணியாற்றிவந்த ஐ பி எஸ் அதிகாரி அருண் ரங்கராஜன் என்பவரை தமிழ் நாட்டில் தன்னை ஆபாசனாக பேசியதாக பெண் போலீஸ் ஊழியர் அளித்த புகாரின் அடிப்படியில் கோபி போலீசார் அவரை கைது செய்துள்ளனர். பின்னர் இவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக புகார் அளித்த பெண் போலீஸ் ஊழியர் சின்சோலி தாலுகாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் இந்த பெண் பெண் போலீஸ் ஊழியருடன் ஐ பி எஸ் அதிகாரி அருண் ரங்கநாதன் திருச்சிக்கு சென்றபோது இருவருக்கும் தகராறு நடந்துள்ளது. அங்கு உள்ளூர் போலீசார் இவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்துள்ளனர். அருண் தன்னை avarudaiya பிறந்த ஊரான திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு தன்னை அழைத்து சென்ற நிலையில் அங்கு தன்னை தாக்கியதாக பெண் போலீஸ் ஊழியர் கோபி மகளிர் போலீஸ் நிலையத்தில் தன் புகாரில் தெரிவித்துள்ளார்.இந்த புகாரின் பேரில் அருண் கைது செய்யப்பட்டுள்ளார். கலபுரகியில் ஐ பி எஸ் அதிகாரி அருண் தன மனைவியை அக்கிரமாக சிறை வைத்து பாலியல் கொடுமைகள் தருவதாக குற்றம்சாட்டி பெண்ணின் கணவன் கடந்த மார்ச் மாதம் புகார் அளித்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது .