பெண் போலீஸ் சடலம் மீட்பு சகோதரன் தற்கொலை

ஹாசன் : செப்டம்பர் . 17 – காணாமல் போயிருந்த பெண் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் இந்த மாவட்டத்தில் நடந்துள்ளது. ஹூலியாறு போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றிவந்த அரிசிகெரே தாலுகாவை சேர்ந்த சுதா (39) கொலையுண்டவர். . அரிசிகெரே – திப்தூர் தேசிய நெடுஞசாலை 206ல் உள்ள மைலனஹள்ளி கிராமத்தின் அருகில் புதர் ஒன்றில் சுதாவின் இறந்து போன உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில்தான் சுதா காணாமல் போனது பற்றி ஹூலியாறு போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியிருந்தது. பண பரிமாற்றும் விவகாரமாக சுதாவை காரில் அழைத்து சென்று அவருடைய சித்தப்பா மகன் மஞ்சுநாத் என்பவன் கொன்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. சுதாவை கொலை செய்துவிட்டு நேற்று மாலை சிவமொக்காவின் லாட்ஜ் ஒன்றில் மரண வாக்குமூலம் எழுதிவைத்து விட்டு மஞ்சுநாத்தும் தற்கொலை செய்து கொண்டுள்ளான். சம்பவ இடத்திற்கு அரிசிகெரே கிராமாந்தர போலீசார் நேரில் சென்று ஆய்வு நடத்தி கொலையுண்ட சுதாவின் உடலை அரிசிகெரே மாவட்ட மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர் .