பெண் மீது ஆசிட் தாக்குதல் நடத்திய நபர் திருவண்ணாமலையில் கைது

பெங்களூர் : மே. 13 – கடந்த ஏப்ரல் 28 அன்று சுங்கதகட்டேவில் இளம் பெண் மீது ஆசிட் தாக்குதல் நடத்தி தலைமறைவாயிருந்த குற்றவாளி நாகேஷை போலீசார் கைது செய்வதில் வெற்றியடைந்துள்ளனர். இளம் பெண் மீது ஆசிட் தாக்குதல் நடத்திய குற்றவாளி நாகேஷ் கடந்த 16 நாட்களுக்கு பின்னர் போலீசாரிடம் சிக்கியுள்ளான் . தமிழ் நாட்டின் திருவண்ணாமலையில் தலைமறைவாயிருந்த நாகேஷை காமாட்சிப்பாள்யா போலீசார் கைது செய்துள்ளனர். எவருக்கும் தான் கிடைக்ககூடாதென்று நாகேஷ் தமிழ் நாட்டில் ஸ்வாமிஜி வேடம் தரித்து தலைமறைவாயிருந்துள்ளான். ஆனால் போலீசார் இவனை கைது செய்வதில் வெற்றியடைந்துள்ளனர். இளம் பெண் மீது ஆசிட் தாக்குதல் நடத்தி இது வரை தலைமறைவாயிருந்த குற்றவாளி நாகேஷை பிடிக்க பத்து தனி படைகள் அமைக்கப்பட்டிருந்தன. குற்றத்தை செய்த நாகேஷ் போலீசுக்கு எவ்வித தடயங்களும் கிடைக்காதவகையில் தப்பியோடியிருந்ததால் அவனை பிடிக்க போலீசார் பெரும் முயற்சிகள் மேற்கொண்டனர். குற்றவாளி நாகேஷ் பல நாட்களுக்கு முன்னரே முழு திட்டம் தீட்டி குற்றத்தை செய்திருப்பதுடன் வீட்டில் உள்ளவர்களையும் வீட்டை காலி செய்து செல்லுமாறு தெரிவித்திருந்த நிலையில் பல்வேறு மாநிலங்களுக்கு போலீஸ் படையினர் சென்று தேடுதல் வேட்டை நடத்திவந்தனர். அனைத்து கோயில்களிலும் நாகேஷை தேடி போலீஸ் குழுக்கள் சென்றிருந்தன. கடந்த ஏப்ரல் 28 அன்று நாகேஷ் 23 வயதான இளம் பெண் மீது ஆசிட் ஊற்றி தாக்கினான் . தன் காதலை மறுத்ததால் இந்த கொடுமையை நாகேஷ் செய்துள்ளான். சுங்கதகட்டேவில் உள்ள முத்தூட் நிதி நிறுவனத்தில் வேலைக்கு காலை நேரம் சென்றுகொண்டிருந்த இளம் பெண் மீது ஆசிட் ஊற்றி இன்று வரை தலைமறைவாயிருந்த நாகேஷ் எப்படியோ தற்போது போலீசார் வசம் சிக்கிவிட்டான்.