பென்னாகரத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது


பென்னாகரம்,ஏப்.17-
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் பென்னாகரத்தில் நேற்று இரவு 8 மணி முதல் ஆலங்கட்டியுடன் கனமழை பெய்தது. ஆலங்கட்டி மழை காரணமாக சாலைகளில் ஆலங்கட்டிகள் சிதறிக் கிடந்தன. இதனால் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. ஆலங்கட்டி மழை பெய்ததால் சிறுவர்கள் அதை கைகளில் எடுத்து விளையாடினர். கடந்த 10 ஆண்டு பின்னர் தற்போது தான் இந்த பகுதியில் ஆலங்கட்டியுடன் கூடிய கனமழை பெய்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.