பெயர் பலகையில் 60 சதவீதம் கன்னடம் இல்லாத கடைகளுக்கு சீல்

பெங்களூர், பிப். 29-
பெங்களூரில் இன்று முதல் பெயர் பலகைகள் 60 சதவீதம் கன்னடம் பெற வேண்டும் மற்றும் இதைத் தவறும் வணிக நிறுவனங்கள் மூடப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
வணிகர்கள் காலகடுவை நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போதும், அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை.
எனவே, மாநகராட்சி 60 சதவீத கன்னட பெயர் பலகையை இன்று முதல் அமுல்படுத்துகிறது.தொழில் மற்றும் நிறுவனங்கள், அறக்கட்டளைகள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு மையங்கள், மற்றும் ஹோட்டல்கள் உட்பட அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் பொருந்தும். மாநகராட்சி உத்தரவுக்கு இன்னும் இணங்காத 3,044 நிறுவனங்கள் அடையாளம் கண்டு ள்ளது. 2024 ம் ஆண்டில் கன்னட மொழி விரிவான மேம்பாட்டு திருத்த சட்டம் சட்டசபை கவுன்சில்களில் நிறைவேற்றியப் பின் பிப்ரவரி 26 ம் தேதி அன்று மாநில அரசும் அறிவித்தது. நிறுவனங்கள் 60% கன்னட பெயர் பலகை காட்ட உறுதி செய்தது. இந்த பெயர் பலகை பாதிக்குமேல் முக்கியமாக வைக்கப்பட வேண்டும். சட்டம் வருவதற்கு முன் மாநகராட்சி டிசம்பரில் பெயர் பலகையை 60 சதவீதம் கன்னடம் தேவை என அறிவித்தது. பிப்ரவரி 28 வரை அரசு காலகெடு அளித்தது.
நிறுவனங்கள் மூடும் அதிகாரம் மாநகராட்சி சுகாதாரத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. சட்டத்தின் கீழ் வர்த்தக உரிமங்களை ரத்து செய்யவும் அதிகாரம் மாநகராட்சிக்கு உள்ளது.
அதிகாரம் வழங்க சட்டம் அனுமதித்தாலும், விதிகளை இறுதி செய்ய கன்னட கலாச்சாரத்துறை இயக்குனர்களுக்கு இன்னும் சில நாட்கள் தேவைப்படலாம்.
வணிகர்கள் கால நீடிப்பு கேட்டனர். இதற்கு மாநகராட்சி சாதகமான பதிலை தரவில்லை. பலாத்காரம், வன்முறை நாடாமல் 60% கன்னடம் அமுல்படுத்த வேண்டும் என்று வர்த்தகம் மற்றும் கூட்டமைப்பு கடிதம் எழுதி உள்ளது. சில வணிகர்கள் பெயர் பலகைகளில் உருவாக்க திறமையான ஆள் பற்றாக்குறை காரணம் காட்டி, கால அவகாசம் கேட்டுள்ளனர்.