பெருகும் தெருநாய்கள்

சென்னை: ஜூன்.1-சென்னையில் குழந்தைகளை தெரு நாய் கடிப்பது தொடர்கதையாகி வரும் நிலையில் சாலையோர உணவக கழிவுகளை உண்டு தெருநாய்கள் பெருகுவதை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை மாநகரப் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை பெரும் சவாலாக இருந்துவருகின்றன. நாள்தோறும் தெருநாய்கள் கடித்ததாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. நேற்றும் அம்பத்தூர் பகுதியில் ஒரு சிறுமியை தெரு நாய்கள் கடித்தன.
மாநகராட்சி நிர்வாகமும் மண்டலத்துக்கு ஒரு வாகனம் வீதம் 15 வாகனங்கள் மூலம்தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து, அதே இடத்தில் விட்டு வருகிறது. தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள், எங்கள் பிரச்சினைக்கு இது தீர்வு இல்லை என குற்றம்சாட்டி வருகின்றனர்.