பெருமாள் கோயிலில்நவராத்திரி விழா

தர்மபுரி,அக். 25- மாவட்டம் நல்லம்பள்ளி அருகே இலளிகம் கிராமத்தில் உள்ளது, அருள்மிகு சென்ன கேசவப் பெருமாள் சாமி திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டு தோறும், நவராத்திரி விழா மற்றும் விஜயதசமி விழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி நட்பாண்டிற்கான நவராத்திரி விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கி, ஒவ்வொரு நாளும் வழிபாடு நிகழ்ச்சிகள் மற்றும் மகா தீபாரதனை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று, வன்னிமரம் குத்துதல் நிகழ்ச்சி மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்னகேசவப் பெருமாள் சுவாமி, வள்ளி தெய்வானை சமேத பாலதண்டாயுதபாணி சுவாமி, அங்காள பரமேஸ்வரி அம்பாள், ஸ்ரீ குறிஞ்சிமாரியம்மன் ஸ்ரீ விநாயகர் மற்றும் பொன்னியம்மன் சாமி உற்சவ மூர்த்திகள் திருவீதி விழாவும், விஜயதசமி விழாவும், பம்ப வாத்தியங்கள், வானவேடிக்கை முழங்க வெகுவிமர்சையாக நடந்தது. விழாவில் லளிகம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர், விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது, ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்,