பெலகாவியில் விபத்து இரண்டு பேர் சாவு

பெலகாவி : நவம்பர் . 2 – கர்நாடக ராஜ்யோஸ்தவா நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட கொடூர சாலை விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்திருப்பதுடன் மேலும் இரண்டு பேர் படுகாயங்களைந்துள்ள சம்பவம் கித்தூர் தாலூகாவின் எம் கே ஹூப்ளி அருகில் தேசிய நெடுஞசாலையில் நடந்துள்ளது. தார்வாட் மாவட்டத்தின் நரேந்திரா கிராமத்தை சேர்ந்த லபைக ஹளசிகரா , பெலகாவியின் பாலேகுந்திரி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீநாத் குஜனாலா ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள். மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இந்த இளைஞர்கள் பெலகாவியல் நேற்று ராஜ்யோஸ்தவா உற்சவத்தை முடித்து கொண்டு பின் திரும்பிக்கொண்டிருந்தனர். இதே நேரத்தில் தாபாவில் உணவை முடித்து கொண்டு வந்து கொண்டிருந்த பாதசாரிகள் மீது மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியுள்ளது. இதில் மோட்டார் சைகிளில் இருந்த ஒருவன் மற்றும் பாதசாரி ஒருவர் என இரண்டு பேர்அதே இடத்தில் உயிரிழந்துள்ளனர். தார்வாடை சேர்ந்த அல்தாப் நாலபந்தா , மற்றும் கடத்தன்பாகிய கிராமத்தை சேர்ந்த அர்ஜுனா ரங்கண்ணா ஆகிய இருவர் இந்த விபத்தில் படு காயங்களடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இறந்தவர்கள் உடல்கள் இருந்த 300 மீட்டர் தொலைவில் இவர்கள் ஒட்டி வந்த வாகனம் தென்பட்டுள்ளது. விபத்து நடந்த பின்னரும் இவ்வளவு தூரம் மோட்டார் சைக்கிள் சென்றுள்ளது எப்படி என்பது விசித்திரமாக உள்ளது. கித்தூர் போக்குவரத்து போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.