பெலகாவி சம்பவம் கண்டித்து மாநிலம் முழுவதும் பிஜேபி போராட்டம்

பெங்களூர் : டிசம்பர் . 16 –
பெலகாவியில் பழங்குடி இன பெண் நிர்வாண சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கர்நாடக மாநில பிஜேபி சார்பில் இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது கர்நாடக காங்கிரஸ் அரசு முழு தோல்வி அடைந்து விட்டது என்று கூறி பெங்களூர் உட்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பிஜேபி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. கர்நாடக காங்கிரஸ் அரசு மக்களுக்கு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துவிட்டது ஆனால் ஆட்சி நடத்த அவர்களுக்கு தெரியவில்லை லஞ்சம் ஊழல் செய்வதில் குறியாக உள்ளனர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது மக்கள் பாதுகாப்பு இல்லாமல் உள்ளனர் என்பதற்கு பழங்குடி இனப்பெண் நிர்வாண சித்திரவதை செய்யப்பட்ட சம்பவமே சாட்சி என்று பிஜேபி தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் பெங்களூர் மும்பை , மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் உட்பட நாடு முழுக்க பி ஜே பி போராட்டங்கள் நடத்தியுள்ளது. கர்நாடாவில் பி ஜே யினர் பெலகாவியில் ஒரு பழங்குடி இன பெண் மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத் இன்று மும்பையில் தாராவி மறு புலனைப்பு விஷயமாக அதானி அலுவலகம் நோக்கி பாதயாத்திரை நடத்தியுள்ளனர். இதே வெளியில் மலை மாவட்டமான ஹிமாச்சலப்பிரதேசத்தில் அம்மாநில மக்கள் தங்களுக்கு பழங்குடியினர் உரிமை கேட்டு இன்று போராட்டம் நடத்தியுள்ளனர். பெலகாவியில் கடந்த வாரம் ஒரு பழங்குடி பெண் தாக்கப்பட்டதற்ற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுக்க இன்று பி ஜே பி போராட்டம் நடத்தியுள்ளது. தலித் இனத்தை சேர்ந்த பெண்ணின் மகன் உயர்ஜாதி பெண்ணுடன் நட்புகொண்டதை எதிர்த்து பழங்குடி பெண்ணை துகில் உரித்து கம்பத்தில் கட்டி கொடுமைப்படுத்தியுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 10 அன்று மாநில பி ஜே பி பிரமுகர் இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள ஐந்து பெண்கள் கொண்ட குழுவை அனுப்பியிருந்தார். ஆனால் இந்த விஷயத்தை வைத்து பி ஜே பி அரசியல் நடத்துவதாக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்கு பின்னர் நட்டா இந்த விவகாரத்த்தை கையில் எடுத்திருப்பது வெறும் அரசியல் நோக்கம் மட்டுமே தவிர பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதுள்ள கருணையால் அல்ல. எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார். உண்மையில் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் கட்சி உட்பூசலகளால் பி ஜே பி பலத்த தோல்வி அடைந்தது . இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. பல மாதங்களாக பி ஜே பி கட்சிக்கு சரியான தலைமை இல்லாத நிலையில் இந்த வாய்ப்பை காங்கிரஸ் பயன் படுத்தி மாநிலத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா மாநில பி ஜே பிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது சித்தராமையா அரசின் சட்டம் ஒழுங்கு சீர்குலைப்பை காரணம் காட்டி பழங்குடி இன மக்களின் ஆதரவை மீண்டும் பெரும் வகையில் பி ஜே பி கட்சி தற்போது பெலகாவியில் பழங்குடி இன பெண் தாக்குதலை தங்களுக்கு சாதமாக்கிக்கொண்டுள்ளது என தெரிய வருகிறது. நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் மாநிலத்தின் 14 பழங்குடியினர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு இடத்தில் ம ஜா தா வெற்றி பெற்றது. இந்த நிலையில் அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலுக்குள்ளாக மாநில பழங்குடி பெண்களின் வாக்குகளை கவரும் நிலையில் பி ஜே பி உள்ளது. தவிர மாநிலத்தில் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள 52 தொகுதியில் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.